என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் மேற்கொண்ட உணவகங்கள், பல சரக்கு கடைகள் உள்பட 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதத்தை தாசில்தார் விதித்தார்.
    அருப்புக்கோட்டை:

    முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட சில கடைகளை விதிமுறைகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது. 

    இதையடுத்து நகரில் விதிமுறைகளை மீறி பேன்சி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் மேற்கொண்ட உணவகங்கள், பல சரக்கு கடைகள் உள்பட 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதத்தை தாசில்தார் விதித்தார்.
    வத்திராயிருப்பு நகர்ப்பகுதிகளில் தமிழக அரசு அறிவித் துள்ள ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு நகர்ப்பகுதிகளில் தமிழக அரசு அறிவித் துள்ள ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.

    அதேபோல முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். .மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கார் மற்றும் வேன் ஆகியவற்றிற்கு இ-பதிவு உள்ளதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அத்தியாவசிய பணிகளுக்கு செல்லக்கூடிய சுகாதார பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் போன்ற பணிகளில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அவர்களை அனுமதித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றும்படியும், அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,192 படுக்கைகள் உள்ள நிலையில் 719 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 473 படுக்கைகள் காலியாக உள்ளன.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,560 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 37,036 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 769 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 4,051 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,192 படுக்கைகள் உள்ள நிலையில் 719 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 473 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1,553 படுக்கையில் உள்ள நிலையில் 503 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,050 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் ஆவுடையாபுரம், கடம்பன்குளம், வடமலாபுரம், இந்திரா நகர், சின்ன பேராலி, ஆர்.ஆர். நகர், புல்லலக்கோட்டை ரோடு, பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர், மொட்டமலை, மம்சாபுரம், அச்சம் தவிர்த்தான், கான்சாபுரம், புல்வாய்கரைப்பட்டி, ஒட்டன் குளம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சாத்தூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, பாலையம்பட்டி, கான்சாபுரம், திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாநிலப்பட்டியலில் 336 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பட்டியலில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சராசரியாக 5 சதவீதமாக உள்ளது.
    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் திருமண ஆசை காட்டி மாணவியை கர்ப்பமாக்கிய அச்சக தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செல்லியாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரகாஷ் (வயது 19), அச்சக தொழிலாளி.

    இவர் தனது உறவினர் முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்வதாக கூறி பிரகாஷ் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் வயிறு வீக்கமாக காணப்பட கட்டி இருக்கும் என்ற எண்ணத்தில் பெற்றோர் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை விசாரித்தனர். அப்போது பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் பிரகாஷை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சியில் எம்.எஸ்.ஆர். காலனி, முத்தரையர் நகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பாளையம்பட்டியிலிருந்து நான்கு வழிச்சாலை வரை புதிதாக சாலை விரிவாக்க பணி நடைபெற்றதால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் அந்த பகுதிகளுக்கு கடந்த 6 மாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் குடிநீர் வழங்காதது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் நான்கு வழிக்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர்.

    இதுகுறித்து தகவல்அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் பிரபு, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் ஒரு சில நாட்களில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    நோய் பாதிப்பிற்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,223 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 36,267 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 485 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,486 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்பிற்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,177 படுக்கையில் 717 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 460 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 536 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 787 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் முத்தால் நகர், சின்ன தாதம்பட்டி, அல்லம்பட்டி, கே. உசிலம்பட்டி, காந்திபுரம்தெரு, நந்தவனம் ெதரு, என்.ஜி.ஓ. காலனி, பெரியவள்ளிகுளம், மீசலூர், அழகாபுரி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அல்லம்பட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சோலை கவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், கோவிலாங்குளம், செம்பட்டி, பாலையம் பட்டி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 57 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 341 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 932 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 6.5ஆக குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனாலும் முழு பட்டியல் வெளியிடப்படாதது ஏற்புடையது அல்ல.

    2-வதாக வெளியிடப்பட்ட மாவட்ட பட்டியலில் 933 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 62 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பாதிப்பு சதவீதம் 7 ஆக உள்ளது. நேற்று ஆக மொத்தம் மாவட்ட பட்டியல்களின்படி 119 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
    விருதுநகர்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிய போதும் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் தற்போது பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு தொற்று பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 30 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு தொற்று இருப்பது தெரியவர, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு 22-ந்தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது தொற்று இல்லை என தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு சாத்தூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஒரு வார ஓய்வுக்கு பின்னர் அந்த பெண் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உறவினர்கள் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கொரோனா சிகிச்சை பெற்ற கர்ப்பிணி என்பதால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அன்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    கோப்புப்படம்

    அந்த குழந்தைக்கு மறுநாள் டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவு நேற்று தெரியவந்தது. இதில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த குழந்தைக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதாக டீன் சங்குமணி தெரிவித்தார்.
    மாவட்டத்தில் இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,881 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,634 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,153 படுக்கைகள் உள்ள நிலையில் 728 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 425 படுக்கைகள் காலியாக உள்ளது.

    சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 513 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 810 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் காந்திநகர், விக்னேஷ் காலனி, லட்சுமி நகர், செவல்பட்டி,மீசலுர், சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாத்தூர், திருச்சுழி, அக்கனாபுரம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் 65 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சாத்தூரில் கொரோனாவுக்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நீதிமன்றத்தில் குற்றத்துறை அரசு உதவி வழக்கறிஞராக பணிபுரிந்தவர் வினோபா செல்வன் துரை.

    தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த இவர், சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வக்கீல் வினோபா செல்வன்துரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 37,128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,070 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,488 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 37,128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,070 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,902 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் நோய் பாதிப்புக்கு 4 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 705 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 403 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 548 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 775 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் சூலக்கரை, கொல்லர்தெரு, சிவன் கோவில் தெரு, புதுத்தெரு, கே.எஸ்.எஸ்.என்.நகர், பாண்டியன் நகர், சத்திரரெட்டியபட்டி, அல்லம்பட்டி, ஆர்.ஆர்.நகர், துலுக்கப்பட்டி, ஆமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    மேலும் திருச்சுழி, கல்லுமடம், உலக்குடி, உளுத்தி மடை, பனைக்குடி, வீரசோழன், பாலையம்பட்டி, பந்தல்குடி, வேப்பங்குளம், அருப்புக்கோட்டை, ராமசாமிபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட பட்டியலில் நேற்று 118 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 420 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,051 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர்  மாவட்டத்தில் மேலும் 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,051 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 34,058 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 1,224 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5,539 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு மேலும் 13 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,198 படுக்கைகள் உள்ள நிலையில் 814 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 384 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சை மையங்களில் 1,563 படுக்கைகள் உள்ள நிலையில் 618 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 845 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி நடுத்தெரு, அல்லம்பட்டி, பேளம்பட்டி, அரசு ஆஸ்பத்திரி, ஜி.என்.பட்டி, காந்திநகர், பட்டேல் ரோடு, இ.பி. காலனி, சூலக்கரை, பாவாலி, பராசக்தி நகர், கலைஞர்நகர், சின்னமூப்பன்பட்டி, ரோசல்பட்டி, லட்சுமி நகர், சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, போக்குவரத்து போலீஸ்பிரிவு, இனாம்ரெட்டியபட்டி, கத்தாளம்பட்டி, ஆமத்தூர், பேராலி ரோடு, பட்டம்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 158 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 472 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம் அருகே டயர் வெடித்ததில் தறிகெட்டு ஓடிய கார் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    தளவாய்புரம்:

    ராஜபாளையம் அருகே சேத்தூர் ஐந்து கடை பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் நடந்து சென்ற சுந்தரம் மீது வேகமாக மோதியது.

    இதில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இதுபற்றி சேத்தூர் போலீசார் விசாரணை செய்ததில் சென்னை சூலக்கரை பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவர் ஓட்டி வந்த கார் என்பதும், தென்காசி ஆய்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×