என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
அருப்புக்கோட்டை அருகே விதிகளை மீறிய 7 கடைகளுக்கு அபராதம்
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் மேற்கொண்ட உணவகங்கள், பல சரக்கு கடைகள் உள்பட 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதத்தை தாசில்தார் விதித்தார்.
அருப்புக்கோட்டை:
முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்து காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட சில கடைகளை விதிமுறைகளுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து நகரில் விதிமுறைகளை மீறி பேன்சி ஸ்டோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அதேபோல சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் மேற்கொண்ட உணவகங்கள், பல சரக்கு கடைகள் உள்பட 7 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதத்தை தாசில்தார் விதித்தார்.
Next Story






