search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 389 பேருக்கு கொரோனா - மேலும் 7 பேர் பலி

    மாவட்டத்தில் இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 40,881 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 35,782 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,634 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 466 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,153 படுக்கைகள் உள்ள நிலையில் 728 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 425 படுக்கைகள் காலியாக உள்ளது.

    சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 513 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 810 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் காந்திநகர், விக்னேஷ் காலனி, லட்சுமி நகர், செவல்பட்டி,மீசலுர், சூலக்கரை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாத்தூர், திருச்சுழி, அக்கனாபுரம், திருத்தங்கல், சிவகாசி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்டத்தில் 65 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×