search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 341 பேருக்கு கொரோனா

    நோய் பாதிப்பிற்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,223 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 36,267 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 485 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,486 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நோய் பாதிப்பிற்கு மேலும் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,177 படுக்கையில் 717 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 460 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1,323 படுக்கைகள் உள்ள நிலையில் 536 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர்அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 787 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் முத்தால் நகர், சின்ன தாதம்பட்டி, அல்லம்பட்டி, கே. உசிலம்பட்டி, காந்திபுரம்தெரு, நந்தவனம் ெதரு, என்.ஜி.ஓ. காலனி, பெரியவள்ளிகுளம், மீசலூர், அழகாபுரி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அல்லம்பட்டி, பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சோலை கவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், கோவிலாங்குளம், செம்பட்டி, பாலையம் பட்டி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், எம்.ரெட்டியபட்டி, திருச்சுழி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 57 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பட்டியலில் 341 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 932 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 6.5ஆக குறைந்துள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஆனாலும் முழு பட்டியல் வெளியிடப்படாதது ஏற்புடையது அல்ல.

    2-வதாக வெளியிடப்பட்ட மாவட்ட பட்டியலில் 933 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 62 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பாதிப்பு சதவீதம் 7 ஆக உள்ளது. நேற்று ஆக மொத்தம் மாவட்ட பட்டியல்களின்படி 119 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×