என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி அருகே காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகாசி:

    சிவகாசி மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி நதிக்குடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.

    அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), முத்துப்பாண்டி (38), வைரமுத்து (39), சுப்பையா முத்துப்பாண்டி (51), விஜயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.5190-ஐ பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் ஆத்தீஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கருப்பசாமி கோவில் அருகில் காசு வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த செல்வம் (39), கருப்பசாமி (30), கருப்பசாமி (42), முருகன் (33), பாலகிருஷ்ணன் (43), முனியாண்டி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5300 பறிமுதல் செய்யப்பட்டது.
    சுபாஸ்சந்திரபோஸ் என்ற வைத்தியர் மட்டும், தனது மனைவியுடன் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார்.
    காரியாபட்டி:

    திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குச்சம்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்து வந்ததால் இந்த மக்கள் வாழ வழியின்றி பிழைப்பைத்தேடி பல்வேறு ஊர்களுக்கு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் சுபாஸ்சந்திரபோஸ் என்ற வைத்தியர் மட்டும், தனது மனைவியுடன் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ஊரே காலியான பின்பு இந்த ஒருவர் மட்டும் ஊருக்கு காவலாளியாக ஊரை காத்து வருகிறார்.

    ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் வருடத்திற்கு ஒருமுறை அங்கு உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    76 வயதாகும் சுபாஸ்சந்திரபோஸ் வைத்தியராக உள்ளார். இவர் தனது வீடு மிகவும் பழுதடைந்து குடியிருக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. ஊரை காத்து வரும் எனக்கு தமிழக அரசு வீடு கட்டி தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர் மாவட்டத்தில் 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,075 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:-

    விருதுநகர்  மாவட்டத்தில் இதுவரை 40,289 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 425 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,286 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    நேற்று நோய் பாதிப்பிற்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 501 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,478 படுக்கைகள் உள்ள நிலையில் 569 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 909 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 302 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,451 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் நந்தவனம்தெரு, நகராட்சி காலனி, ராமமூர்த்தி ரோடு, சூலக்கரை, ரோசல்பட்டி ரோடு, மெட்டுகுண்டு, பாண்டியன் நகர், அழகாபுரி, கன்னிசேரி, மணிநகர், மீசலூர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், துலுக்கப்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் மல்லி, எரிச்சநத்தம், வலையங்குளம், காடனேரி, கீழாண்மறை நாடு, சாத்தூர், சித்தம் பட்டி, பந்தல்குடி, சித்தலகுண்டு, காரியாபட்டி, மல்லாங்கிணறு, எம்.ரெட்டியபட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலில் 107 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலப்பட்டியலில் 178 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிப்பு சதவீதம் 4.5ஆக உள்ளது.
    தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் சிவஜோதி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
    சிவகாசி:

    சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முருகன் காலனியில் மணி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இங்கு எந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல் நேற்று காலை தீக்குச்சி உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சி உற்பத்தி நடைபெற்று வந்த எந்திரத்தில் உராய்வின் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த எந்திரம் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலை தனி தாசில்தார் சிவஜோதியும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
    மாவட்டத்தில் இதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,895 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 39,864 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 661 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,534 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பிற்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 498 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 1,538 படுக்கைகள் உள்ள நிலையில் 721 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 817 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் உள்ள நிலையில் 338 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1415 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி, சூலக்கரை, வ.உ.சி. நகர், ரோசல்பட்டி, கெப்பிலிங்கம்பட்டி, ெரயில்வே பீடர் ரோடு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கீழ பொட்டல் பட்டி, சிவலிங்கபுரம், முனீஸ்வரர் காலனி, புதுப்பட்டி, சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, எம்.ரெட்டியபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாவட்ட பட்டியலின் படி 21 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 9 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழி சாலை வாகன போக்குவரத்திற்கு தகுதி இல்லாத நிலையில் சேதமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டதில் இருந்து வாகன போக்கு வரத்து அதிகரித்துள்ளது. இந் நிலையில் நான்கு வழி சாலை அவ்வப்போது பல இடங்களில் சேதமடைந்த நிலையில் வாகன போக்குவரத்திற்கு தகுதி இல்லாத நிலையில் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் பல்வேறு தரப்பினர் கோரியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மதுரை ஐகோர்ட்டு தலையீட்டின் பேரில் மதுரையில் இருந்து கள்ளிக்குடி வரையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது.

    ஆனால் மதுரையில் இருந்து சாத்தூர் வரையிலான நான்கு வழி சாலை பல இடங்களில் சேதமடைந்து தடுப்பு வேலி சேதமடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    இந்தநிலையில் விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச் சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தாலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளது.

    வழக்கமாக தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்றம் தலையிட்டு சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால் அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்த பின்பு தான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளும் நிலை உள்ளது.

    மதுரையில் இருந்து திருமங்கலம் வரையிலான நான்கு வழிச் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை ஐகோர்ட்டு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்படும் என்று அறிவித்த பின்பு தான் அந்த பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டது.

    இதேபோன்று மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையும் நீதிமன்ற தலையீட்டின் பேரில் தான் சீரமைக்கப்பட்டது. ஆனால் விருதுநகர்-சாத்தூர் இடையேயான நான்கு வழிச்சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ள நிலையில் விபத்துகள் அதிகரிக்கும் நிலை தொடர்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்.ஆர்.நகரில் சேதமடைந்த மேம் பால சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அந்தபகுதி விபத்து பகுதியாகவே மாறிவிட்டது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் தாமதிக்காமல் விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையை உடனடியாக சீரமைத்து வாகன விபத்துக்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் ஆர்.ஆர்.நகர் மேம்பால சீரமைப்புபணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி பல இடங்களில் சேத மடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் தடுப்பு வேலிகளை முற்றிலுமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தை சேர்ந்த மகேசுவரன் என்பவர் மதுரை சாலையில் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான லாரியை இவரது அலுவலகம் எதிரே சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 6-ந் தேதி இந்த லாரியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இது குறித்து மகேசுவரன் அளித்த புகாரின் பேரில், வடக்கு போலீசாரிடம் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் திருடு போன லாரியை கண்டுபிடிக்க 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் அமைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் தனிப்படையினர் லாரியை தேடி வந்தனர்.

    திருடப்பட்ட லாரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்த சங்கர் என்பவரின் பணிமனையில் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த சேக் செய்யது அலி, புளியரையை சேர்ந்த அப்துல்காசிம் மற்றும் முகமது நசீம் ஆகியோர் லாரியை திருடியது தெரிய வந்தது. திருடர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லாரியை திருடி, அதன் பதிவு எண்ணை மாற்றி தொடர்ச்சியாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் திருடப்பட்ட லாரி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி என 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றையும் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர்.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,858 படுக்கைகள் உள்ள நிலையில் 1,115 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு 743 படுக்கைகள் காலியாக உள்ளன.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,693 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39,203 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,858 படுக்கைகள் உள்ள நிலையில் 1,115 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு 743 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 346 படுக்கைகளில் நோய் பாதிக்கப் பட்டோர் அனுமதிக்கப்பட்டு 1,407 படுக்கைகள் காலியாக உள்ளன.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மீசலூர் என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், அல்லம்பட்டி, முத்தால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இடைய பொட்டல், ராமச்சந்திராபுரம், பெருமாள்பட்டி, நக்கமங்கலம், மம்சாபுரம், நாச்சியார்பட்டி, சுக்கிலநத்தம், மேல குருணைக்குளம், செங்கோட்டை, அய்யனார்குளம், மகராஜபுரம், சுந்தரபாண்டியம், தும்முசின்னம்பட்டி, அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி திருத்தங்கல் வீரசோழன் உள்ளிட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 260 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் 3 வீடுகளில் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவில் உள்ள வக்கீல் சந்து மற்றும் கான்வென்ட் தெற்கு தெரு பகுதியில் கடந்த 8-ந் தேதி அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடைபெற்றது.

    இதுகுறித்து போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் (வயது 29) என்பதும், இவர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே போலீஸ்காரராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

    இவர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும், சாத்தூரில் ஒரேநாளில் 3 வீடுகளில் நகை மற்றும் பணத்தை திருடியதும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் விசாரணை நடத்தி வருகிறார்.
    மாவட்ட பட்டியலில் 47 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 273 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து 38,897 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 444 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,042 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 8 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 488 ஆக உயர்ந்துள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் 1448 படுக்கைகள் உள்ள நிலையில் 865 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 623 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1753 படுக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1339 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் பாண்டியன் நகர், அல்லம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், சூலக்கரை, காந்திநகர், மருளூத்து, சின்ன மருளூத்து, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அகத்தாகுளம், மல்லாங்கிணறு, காரியாபட்டி, நத்தம்பட்டி, சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சிவகாசி, திருத்தங்கல், திருச்சுழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட பட்டியலில் 47 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் 273 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று பாதிப்பு சதவீதம் 3 ஆக குறைந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2-வது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் விருதுநகர் வச்சக்காரபட்டி, மெட்டுகுண்டு, பட்டம்புதூர், தாதம்பட்டி, சின்னையாபுரம், செந்தி விநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி 4 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினை அமைச்சர் கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரதமரின் அவசரகால நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் மத்திய ராணுவ அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் செய்து முடித்துள்ளனர். இந்த உற்பத்தி மையம் மூலம் 200 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் வழங்கும் வசதி ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன்உற்பத்தி மையத்தினை கலெக்டர் கண்ணன் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் கிடைப்பதற்காக வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் இருந்து ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

    தமிழகத்தில் முதன்முதலாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.97.5 லட்சம் மதிப்பீட்டில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் பிற ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன்அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த உற்பத்தி மையத்தில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மேலும் இந்த மையத்தினை உருவாக்குவதில் செயல்பட்ட 6 என்ஜினீயர்களுக்கு அமைச்சர்கள் நினைவு பரிசு வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், டாக்டர் ரகுராமன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தடுப்பூசி இருப்பு குறித்தும், முகாம் ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் வெளியே காத்திருந்த பொதுமக்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்நிலையில் 900 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 41,857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 37,968 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,414 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 476 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,191 படுக்கைகள் உள்ள நிலையில் 682 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 509 படுக்கைகள் காலியாக உள்ளன.

    சிகிச்சை மையங்களில் 1,553 படுக்கைகள் உள்ள நிலையில் 394 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1159 படுக்கைகள் காலியாக உள்ளன.

    விருதுநகர் ஆமத்தூர் பாண்டியன் நகர், கலைஞர் நகர், கே.கே.எஸ்.எஸ்.என். நகர், அரசு ஆஸ்பத்திரி, சத்திர ரெட்டியபட்டி, என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம,் சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, சுந்தரராஜபுரம், கிருஷ்ணன்கோவில், மல்லாங்கிணறு, சூரம்பட்டி, முடுக்கன்குளம், புலியூரான், ஆத்திப்பட்டி, கல்லு மடம், நாரணாபுரம், புதூர், சித்துராஜபுரம், சிவகாசி, திருத்தங்கல், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர், முகவூர், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாநிலப்பட்டியலில் 294 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட பட்டியலில் 121 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு 5 சதவீதமாக குறைந்துள்ளது.
    ×