search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,858 படுக்கைகள் உள்ள நிலையில் 1,115 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு 743 படுக்கைகள் காலியாக உள்ளன.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 260 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 42,693 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39,203 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 1,858 படுக்கைகள் உள்ள நிலையில் 1,115 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு 743 படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சை மையங்களில் 1,753 படுக்கைகள் உள்ள நிலையில் 346 படுக்கைகளில் நோய் பாதிக்கப் பட்டோர் அனுமதிக்கப்பட்டு 1,407 படுக்கைகள் காலியாக உள்ளன.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மீசலூர் என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், பாண்டியன் நகர், கருப்பசாமி நகர், அல்லம்பட்டி, முத்தால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இடைய பொட்டல், ராமச்சந்திராபுரம், பெருமாள்பட்டி, நக்கமங்கலம், மம்சாபுரம், நாச்சியார்பட்டி, சுக்கிலநத்தம், மேல குருணைக்குளம், செங்கோட்டை, அய்யனார்குளம், மகராஜபுரம், சுந்தரபாண்டியம், தும்முசின்னம்பட்டி, அருப்புக்கோட்டை எம். ரெட்டியபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி திருத்தங்கல் வீரசோழன் உள்ளிட்ட பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 260 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு சதவீதம் 3.5 ஆக உள்ளது.
    Next Story
    ×