என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கந்துவட்டி வழக்கில் பைனான்சியர் கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார்வளாகம் காளையார்குறிச்சி தெருவில் குடியிருப்பவர் பன்னீர்செல்வம். இவர் தீப்பெட்டி தொழில் நடத்தி வருகிறார். 

    தொழில் அபிவிருத்திக்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த பைனான்சியர் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம்  கடன் வாங்கியுள்ளார். இதற்கு வட்டி மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார்.

    சில வருடங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட தால் பன்னீர் செல்வத்தால் வட்டியை சரிவர கொடுக்க முடியவில்லை. இதனால் பைனான்சியர் ராமு என்ற ராமசாமி தனது அலுவலகத்திற்கு பன்னீ ர்செல்வத்தை வரவழைத்து உட்காரவைத்து வட்டி ஏன் கொடுக்கவில்லை? என கூறி அடித்ததாகவும், குடும்பத்தாரைப் பற்றி அவதூறாக பேசி வெற்று பேப்பரில் கையெழுத்து, புரோ நோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

    மேலும் ராமு என்ற ராமசாமி அலுவலகத்தில் பணிபுரியும் காளிராஜ் மற்றும் விஜயராகவன் ஆகியோர் தனது வீட்டிற்கு வந்து மிரட்டியதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் பன்னீர்செல்வம் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் பைனான்சியர் ராமசாமி, அவரது அலுவலகத்தில் வேலைபார்க்கும் காளிராஜ், விஜயராகவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பைனான்சியர் ராமசாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மாத்தூர். இந்த ஊரை சேர்ந்தவர் கார்த்திக். ஜவுளி வியாபாரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விருதுநகரில் பிளஸ்-1 படித்த உறவுக்கார சிறுமியை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் எரிச்சநத்தம் பகுதியில் குடியிருந்து வந்ததாக தெரிகிறது.

     இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். அவர் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றதாக தெரிகிறது. 17 வயது பெண் குழந்தை பெற்றதால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் கேர ளாவை சேர்ந்த சஜித்கு  மார்(வயது45), கூடலூரை சேர்ந்த கனகசுந்தரம் (55), திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்த மணி (35), கொடைக்கானல் பகுதியை சேர்ந்த செல்வம் (38) ஆகியோர் சினிமா படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் ரூ.67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களை காரில் கொண்டு வந்தனர்.

    இவர்கள் கூமாப்பட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ்(30), அவரது நண்பர்கள் பாலமுருகன்(30), குபேந்திரன்(28), வினோத்(35), ராஜா(35) உள்ளிட்டோரிடம் பணம் இரட்டிப்பு பரிமாற்றம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

    அப்போது கேர ளாவை சேர்ந்த சஜித்குமார், கூமாபட்டி கொடிக்குளத்தை சேர்ந்த பூமிராஜ் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட வத்திராயிருப்பு போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். 

    அப்போது சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுக்களை, அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்து மக்களை ஏமாற்றி புழக்கத்தில்விட திட்ட                மிட்டது தெரியவந்தது.
    அதையடுத்து சஜித்குமார், கனகசுந்தரம், பூமிராஜ், குபேந்திரன், பாலமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைதான 5 பேரிடமும் தீவிர விசா ரணை நடத்தினார்.

    மேலும், அவர்களிடம் இருந்த ரூ.36 ஆயிரத்து 500 மற்றும் 67.87 லட்சம் போலி ரூபாய் நோட்டுக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தப்பி ஓடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

    தப்பியோடிய செல்வம், தாண்டிக்குடி மணி, கூமாபட்டி வினோத், ராமசாமியாபுரம் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகரில் ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்தனர். அவரது தாய் வேலைக்கு சென்று விடுவதால் மகளை தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்திருந்தார்.

    அப்போது மாணவியை, விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான ரமேஷ் (19) என்பவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். ரமேஷ் மாணவியின் ‌செல்போன் எண்ணை வாங்கி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகவும், மேலும் இரண்டு முறை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அவரது தாய் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி மாணவியிடம், அவரது தாய் கேட்டபோது, உறவினர் ரமேஷ் திருமண ஆசை காட்டி தன்னிடம் நெருக்கமாக இருந்ததாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இது பற்றி விருதுநகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் ரமேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ரமேஷ் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .

    மாணவியின் படிப்புக்காக வாங்கி கொடுத்த செல்போன், அவரது வாழ்க்கையை திசை மாற்றி விட்டது என்பதை அறிந்து அவரது பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    வெம்பக்கோட்டை அருகே நடந்து வரும் அகழாய்வில் யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.
    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம்  வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் அருகில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணால், விலை உயர்ந்த சூதுபவளம் மண்பானைகள் சுடு மண்ணால் செய்யப்பட்ட மண் கிண்ணங்கள், மண் குடம், புகை பிடிக்கும் கருவி, சில்லு வட்டுகள், சங்கி னால் செய்யப்பட்ட விளை யாட்டு பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு கண்டறியப் பட்டது, 

    இந்நிலையில் நேற்று நடந்த அகழாய்வின்போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் சுடுமண்ணால் ஆன தொங்கட்டான் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது. யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன் 5சென்டி மீட்டர் நீளமும், 0.8 சென்டி மீட்டர் விட்டமும், 61 கிராம் எடை கொண்டதாக உள்ளது, அதே போல் சுடுமண் தொங்கட்டான் 2.2 சென்டி மீட்டர் நீளமும், 1.01 சுற்றளவும் 65 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 

    தற்பொழுது கண்டறியப்பட்ட இரு அணிகலன்கள் மூலம் தொன்மையான மனிதர்கள் சுடுமண் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்தி உள்ளதும் பெண்கள் அணி கலங்களை அழகிய வடிவில் பயன்படுத்தி உள்ளது வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    அகழாய்வுகளில் திறக்க ப்படாமல் மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு மணி மணிகள் கிடைத்துள்ளன. அதனை ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் நாளை திறக்கப்படுவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
    வசூல் முறைகேடு புகார் தொடர்பாக மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் காலனி தெருவில் வசிப்பவர் மாடசாமி (வயது 64) விவசாயி.  இவர் வசிக்கும் பகுதியில் நாச்சியார்பட்டி ரோடு அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற மின் ஊழியர் ஆபிரகாம் சத்தியசீலன் (64) என்பவர் மின் வாரியம் மூலம் வீடுகளுக்கு பழைய மீட்டரை எடுத்துவிட்டு புதிய மீட்டர் வைப்பதற்காக பணம் வசூல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாடசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலு வலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாடசாமி, ஆபிரகாம்  சத்தியசீலன் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று இரவு மாடசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் கீழ ரதவீதியில் உள்ள டீ கடைக்கு எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஆபிரகாம் சத்தியசீலன் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாடசாமியை  செருப்பால்   தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாம் சத்தியசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பவுர்ணமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

    இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இன்று வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பவுர்ணமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி அருளைப் பெற்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் பகுதியில் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
    வத்திராயிருப்பில் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் பகுதியில் ஒரு கும்பல் போலி ரூபாய் நோட்டுக்களை பொதுமக்களிடம் கொடுத்து மாற்ற முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வத்திராயிருப்பு போலீசார் சம்பவ இடத்தில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சினிமாவில் பயன்படுத்தும் போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இவைகளை அசல் ரூபாய் நோட்டுகளில் உள்ளே வைத்து மாற்ற முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ. 6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளும், அசல் ரூ. 36,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    போலி நோட்டுகளை அசல் ரூபாய் நோட்டுகளை வைத்து மாற்ற முயன்றதாக முயன்ற கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஜித் குமார், கூடலூர் கனகசுந்தரம், கொடிக்குளம் பூமி ராஜ், குபேந்திரன், கூமாபட்டி பாலமுருகன் ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில்வி ரிவாக்கப்பணி நடந்தது.

    “108 ஆம்புலன்ஸ் செயல்முறை விளக்கம்” என்ற தலைப்பில்தி ருத்தங்கல் அரசு மருத்துவ மனையின் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ அலுவலர் ராஜசேகர், பைலட் குமார ராஜா  ஆகியோர் பங்கேற்றனர். ரரஜசேகர் பேசுகையில், மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு குறித்த பிரச்சினைகளுக்கு 108 ஆம்புலன்சை அழைக்கலாம். உயர்ரக வசதிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ் விருதுநகரில் உள்ளது என்று கூறிய அவர், அதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளக்கினார். 

    குமார ராஜா பேசுகையில், விபத்துகள் மூலம் ஒவ்வொரு வகையான பாதிப்புகளை அடைந்தவர்களை எவ்வாறு கவனிக்க வேண்டும்? என்பதையும்,எப்படி முதலுதவி செய்ய வேண்டும்? என்பதையும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் செயல்முறை விளக்கம் அளித்தார். மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். வடமலாபுரம்அ ரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செங்கமலநாச்சியார்ந ன்றி கூறினார்.

    இந்தநிகழ்வில் 66 கல்லூரி மாணவர்களும், 80 பள்ளி மாணவர்களும், 6 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல், கணினிப் பயன்பாட்டியல் துறை  உதவிப்பேராசிரியர்கள் கார்த்தீஸ் பாண்டியன், மனோஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    அரசு மருத்துவமனையில் செயல்படாமல் உள்ள எக்ஸ்ரே பிரிவால் நோயாளிகள் வேதனை அடைகின்றனர்.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்று வட்டார கிராம பகுதிக ளுக்கு தலைமை மருத்துவமனையாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை  உள்ளது. இந்த மருத்துவமனையில்  வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாப்பட்டி,நெடுங்கு ளம், கொடிக்குளம்,சேது நாராயணபுரம், பட்டுப்பூ ச்சி, சுந்தரபாண்டியம்,  மகாராஜபுரம், தம்பிபட்டி,மேலக்கோபாலபுரம்உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சொல்கின்றனர்.

    இந்த மருத்துவமனை  92 படுக்கைகள் கொண்டு உள்ளது. 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் காயமடையும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவந்து இந்தமருத்துவமனையில்  தான் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டால் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும்  நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க முடியாத நிலை உள்ளது.அத்துடன் எக்ஸ்ரே கருவியும்  தற்போதுள்ள நவீன கருவியாக இல்லை.எக்ஸ்ரே பிரிவிற்கு பணியா ளர்கள் இல்லாததால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் வெளியே உள்ள தனியார் எக்ஸ்ரே நிலையத்திற்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து எக்ஸ்ரே எடுக்கும் சூழ்நிலை உள்ளது.

    வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியாளர்கள் 5  பேர் பணி செய்யக்கூடிய இடத்தில் ஒருவர், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். தற்போது வரை தூய்மை பணியாளர்கள்  நியமனம் செய்யாமல் இருப்பதால் வெளி நபர்களை வைத்து மருத்துவமனையில் தூய்மை பணி செய்யப்பட்டு வரு கிறது.மேலும் இந்த அரசு மருத்துவமனைக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் இரவு காவலாளி இல்லாத தால் இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யார் வந்து செல்கிறார்கள் என்று கண்காணிக்க முடியாத நிலையும் உள்ளது.

    வத்திராயிருப்பு தாலுகாவாக அறிவிக்கப்ப ட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த அரசு மருத்துவமனையின்  தரம் உயர்த்தப்படாமல் இருப்பதால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும் உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களும்,நவீன எக்ஸ்-ரே கருவியும் அமைத்துக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர் (பால்வளம்), விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56  ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கணக்குகள் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. 

    அதில் அதிக  கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி ரூ.6  லட்சத்து 24 ஆயிரத்து 415.20 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.  

    இதைத்தொடர்ந்து கையிருப்பு குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையிருப்பு குறைவை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் (பொறுப்பு) தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணை ப்பதிவாளர் (பால்வளம்) உத்தரவிட்டுள்ளார்.
    ×