என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள்-இளம்பெண்கள் மாயமானார்கள்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவரது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் கல்போது கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா கனி. பட்டாசு தொழிலாளி. இவருக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மகள் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை. வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
காரியாபட்டி, கல்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் ஈரோட்டில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஷாஜாத்தி பேகம். இவரது மகள் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மணிகண்டன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக குழந்தைகளுடன் அந்தபெண் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வேலைக்கு சென்று வந்த அவர் திடீரென 3 குழந்தைளுடன் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பால பணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் முன்னிலையில் மேம்பாலம் நடைபெறும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை மூலமாக மின் கம்பத்தை அகற்றி தருமாறும்,நகராட்சி நிர்வாகம் மூலமாக மரங்களை அகற்றி தருமாறும் மேம்பால பணி ஒப்பந்ததாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து இருதுறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் பணி நிறைவடைய ஒத்துழைப்பு தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
மேலும் மேம்பால பணிகள் இன்னும் 5 மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி பரிசாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
அதிகாரிகளை முடுக்கிவிட்டு மேம்பால பணிகளை துரிதப்படுத்திய தங்கபாண்டியன் எம்.எல். ஏ.வின் நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்வில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி இந்திரா நகரை சேர்ந்த பாபு (வயது 49) பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர் பிரிந்து சென்றுவிட்டதால் பாபு 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் ஷர்மிளா (20) இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திவான் பாட்சா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மாதத்திலேயே காதல் கசந்துவிட்டதால் 2-வதாக அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
அவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.பின்னர் மேட்ட மலையைச் சேர்ந்த கார்த்திக் ராமையா என்பவருடன் சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.அவருடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஷர்மிளா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் கல்லூாரி மாணவிகள் மாயமானார்கள்.
விருதுநகர்
விருதுநகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் வெளியில் சென்ற மாணவி பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இதுபற்றி முருகன் வச்சகாரபட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த அச்சம் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று அவர் மாயமாகி விட்டார்.அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி மணிகண்டன் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கேண்டி நூல் விலை ரூ. 90 ஆயிரம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான விசைத்தறி கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
தற்போது நூல் விலை உயர்வு கடுமையான அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் தொழில் செய்ய இயலாத நிலையில் விசைத்தறி கூடங்கள் நேற்று மூடப்பட்டன. கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கேண்டி நூல் விலை ரூ. 90 ஆயிரம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே 6 மாத காலத்திற்கு முன்பே ஆர்டர் எடுத்து தொழில் செய்து வரும் நிலையில், இந்த கூடுதலான விலையேற்றத்தை சமாளிக்க இயலாத நிலையில் 2 தினங்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 2வது நாளாக இன்றும் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன.
உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நூல் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து மேலும் சில விலக்குகள் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து தொழில் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விசைத்தறி நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர்:
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர ரெயிலாக இயக்கப்படும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழக்கிழமைதோறும் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 6029) இயக்கப்படுகிறது. 3 மாத காலத்திற்கு நவீனரக ஹெச்.எல்.பி. ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் இந்த ரெயில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.
நெல்லையில் இருந்து தென்காசி, பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் முதல் ரெயில் ஆகும். மேலும் ஊட்டி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் முதல் ரெயிலும் இதுதான்.
மேலும் நெல்லையில் இருந்து செல்லும் போது வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பழனிக்கு சென்றடைவதால் காலை 5.30 மணி அளவில் கோவிலில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. கோவைக்கு காலை 6.30 மணிக்கு செல்லும் நிலையில் வர்த்தகர்களுக்கு தங்களது வர்த்தக பணியை மேற்கொள்ளவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது. கோடை கால சீசனையொட்டி ஊட்டி செல்வதற்கும் இந்த ரெயில் தென்மாவட்ட மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது உறுதி.
மேலும் மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரெயில் (எண் 6030) இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை வந்தடைகிறது.
எனவே தென் மாவட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் வசதியாக உள்ள இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே தென்மாவட்ட எம்.பி.க்கள் இதுகுறித்து தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி இந்த சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் பஸ் கட்டணத்தைவிட இந்த ரெயில் கட்டணம் குறைவாக இருப்பதால் இந்த ரெயிலில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மக்கள் சேவை தான் ரெயில்வே துறையின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் ரெயில்வே நிர்வாகம் இந்த சிறப்பு ரெயிலை தொடர்ந்து தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.