search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் செயல்படாமல் இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் செயல்படாமல் இருப்பதை படத்தில் காணலாம்.

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

    கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கேண்டி நூல் விலை ரூ. 90 ஆயிரம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர், முத்துசாமிபுரம், புனல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான விசைத்தறி கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    தற்போது நூல் விலை உயர்வு கடுமையான அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் தொழில் செய்ய இயலாத நிலையில் விசைத்தறி கூடங்கள் நேற்று மூடப்பட்டன. கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரு கேண்டி நூல் விலை ரூ. 90 ஆயிரம் இருந்து வந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்வு கண்டுள்ளது.

    இதன் காரணமாக ஏற்கனவே 6 மாத காலத்திற்கு முன்பே ஆர்டர் எடுத்து தொழில் செய்து வரும் நிலையில், இந்த கூடுதலான விலையேற்றத்தை சமாளிக்க இயலாத நிலையில் 2 தினங்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 2வது நாளாக இன்றும் சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன.

    உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நூல் பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து மேலும் சில விலக்குகள் கொடுத்தால் மட்டுமே தொடர்ந்து தொழில் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விசைத்தறி நெசவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×