என் மலர்
வேலூர்
- வருகிற 31-ந் தேதி முதல் வழங்க உத்தரவு
- அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்
வேலூர்:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது.
மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் வகையில் உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மதிப்பெண் சான்றிதழ் வைத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
அந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் உண்மை நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா, அனைத்து உதவி இயக்குனர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவர்களுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் அசல் நகல் வருகிற 28-ந் தேதி (நாளைக்குள்) ஒப்படைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வருகிற 31-ந் தேதி முதல் மாணவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திடீரென சாலையின் குறுக்கே வந்தது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
காட்பாடி:
காட்பாடி அடுத்த செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). இவர் தனது பைக்கில் நண்பருடன் காட்பாடியில் இருந்து செங்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப் போது, சாலையின் குறுக்கே திடீரென மாடு வந்தது, அதன்மீது ரமேஷ் ஓட்டி வந்த பைக் மோதியது.
இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக, அங்கி ருந்தவர்கள் படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
- அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது
வேலூர்:
தமிழ் ஆட்சி மொழி சட்டத்தின் முதன்மை பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என்று அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடை முறையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தந்தை, தாய், ஊர் பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என்று ஆணை வெளியி டப்பட்டது.
ஆனால் அரசு அலுவலர்கள் கூட முன்னெழுத்தை முழுமையாக தமிழில் எழுதுவதில்லை என்றும், எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை செயற்ப டுத்தும் வகையிலும் உயர் அலுவலர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் பெயர்களை எழுதும்போதும், கையொப்பமிடும்போதும் தமிழிலேயே எழுதப்பட்ட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பாவது:-
அரசாணை மற்றும் அரசு கடிதத்தின் மீது தங்களின் கவனம் ஈர்க் கப்படுகிறது. அதில் தெரி வித்துள்ளவாறு, அரசு அலுவலகங்களில் பணிபு ரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறை களின்படி தங்களின் பெயர்களை எழுதும்போது கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே எழுத வேண்டும். இவ்லாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கலெக்டர் தகவல்
- 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
வேலூர்:
மருத் துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேடு-2 பணிடத்திற்கு நேரடி தேர்வு மூலம் ஆட்சேர்ப்புக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் படைவீரர்களுக்கு வயது உச்ச வரம்பு எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம் பிசி, டிஎன்சி இனப்பிரி வினை சார்ந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு இல் லை, ஓசி பிரிவி னைச் சார்ந்தவர்களுக்கு 50 வயதும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. தகுதிவாய்ந்த பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த முன்னாள் படைவீரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் www. mrb.tn.gov.in என்ற இணையதள மூலம் விண் ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய, வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- சாலை அமைக்க தீவிரம்
- இட வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட பீஞ்சமந்தை மலை ஊராட்சி, அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில் 1½ வயது சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் பாம்பு கடித்து உயிர் இழந்தனர்.
அல்லேரிமலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட 3.2 எக்டர் நிலத்திற்கு 6.4 எக்டர் அளவான மாற்று இடத்தை வருவாய் துறை மூலம் அல்லேரி மலையில் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட அந்த இடம் எங்களுக்கு வேண்டாம்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது.
எனவே பேரணாம்பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுரமாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர்.
இதையடுத்து வனத்துறையினருக்கு இடம் வழங்க, வருவாய்த் துறையினர் வேலூர் காகிதபட்டறை பகுதியில் உள்ள மலைைய தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினருடன், வனத்து றையினர் இணைந்து காகிதப்பட்டறை மலையில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நடந்து சென்று கலெக்டர் ஆய்வு
வனத்துறைக்கு இடம் அளந்து வழங்கப்பட்டுள்ள நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.
வரதலம்பட்டு மலை கிராம அடிவாரத்தில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி மலை உச்சிக்கு கலெக்டர் நடந்து சென்று, எந்த இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சாலையை அடித்து செல்லாத வகையில் மழை நீரை எவ்வாறு அப்புறப்ப டுத்துவது, வளைவுகளில் வாகனங்கள் திரும்பும் அளவிற்கு இட வசதி உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகாஆனந்தன், துணை தலைவர் கம்சலா சுந்தரேசன், அலாலேரி கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உள்ளிட்டோர் உள்ளிட்டனர்.
- ரூ.11.50 லட்சம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி கிடைத்தது
- பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை செலுத்துகின்றனர்
அணைக்கட்டு:
வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் சயெ்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்நிலையில், நேற்று எல்லையம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, வேலூர் சரக ஆய்வாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வாளர் பாரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில், பக்தர்கள் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம், 86 கிராம் தங்கம், 560 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியில் விரிஞ்சிபுரம் மார்க்கப்பந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் சரவணபாபு மற்றும் கோவில் ஊழியர்கள், தன்னார்வ லர்கள் ஈடுபட்டிருந்தனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் த.அகோரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஜீஸ், ஒன்றிய திமுக பொருளாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.
கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2-வது திருமணம், மிரட்டல், பெண்ணுடன் ஓட்டம்
- வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஹபீபா (வயது 19) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் உமர் பாரூக் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எனது கணவர் பேரணாம்பட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வரதட்சனை வாங்கி வர வேண்டும் என துன்புறுத்துகிறார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் பேர்ணாம்பட்டை, அடுத்த தலக்காடு மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்த துபேலா பர்வீன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் அஸ்லாம் பாஷா பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் மகன் உள்ளார்.
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என்னை வீட்டில் இருந்து துரத்தி விட்டார். தட்டி கேட்டால் ஆட்களை வைத்து மகனை கடத்தி சென்று விடுவதாக மிரட்டல் இருக்கிறார். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தை சேர்ந்த மோகனா (வயது 24) என்பவர் கொடுத்த மனுவில் என்னுடைய கணவர் கார்த்திக் எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் கம்பி வேலை செய்து வருகிறார்.
கடந்த 14 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கணவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதனால் நானும் எனது குழந்தைகளும் வாழ வழி இன்றி தவித்து வருகிறோம். கணவரை மீட்டு தர வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
3 பெண்கள் கணவர்கள் மீது புகார் அளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- முகாம்கள் 24-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
வேலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம், விண்ணப்பங்களை கைபேசி செயலியின் மூலம் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகள், விண்ணப்ப பதிவு முகாம்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3,02,447 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் ரேசன் கடைகள் மூலமாக 20.07.2023 முதல் 23.07.2023 வரை இல்லங்களுக்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று செயலியில் பதிவேற்றும் செய்யும் 397 முதற்கட்ட முகாம்கள் 24-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 24-ந் தேதி அன்று நடைபெற்ற முதல் நாள் முகாமில் வேலூர் வட்டத்தில் 6,716, காட்பாடி வட்டத்தில் 3675, அணைக்கட்டு வட்டத்தில் 3243, குடியாத்தம் வட்டத்தில் 3307, கீ.வ.குப்பம் வட்டத்தில் 3568, பேரணாம்பட்டு வட்டத்தில்3347 என மொத்தம் 23,856 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, அரியூர் அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் முகாம்களை கலெக்டர்பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை 25-வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் நகர் பகுதியில் 2 மற்றும் 3-வது தெருக்கள் உள்ளன.இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட தாகவும், கூடுதல் நேரம் குடி நீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை குறைந்தநேரமே குடிநீர் வினியோகம் செய்யப்பட் டுள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த விநாயகர்நகர் பொதுமக்கள் காலி குடங்களுடன் பழைய முன்சீப் கோர்ட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது பொதுமக்கள், 15 நாட் களுக்கு ஒருமுறை வழங்கப் படும் குடிநீர் அத்தியாவசிய தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் நாங்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத் தும் நிலை உள்ளது.
எங்களுக்கு கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாநக ராட்சி அலுவலர்கள், நாளை (இன்று) காலை முதல் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கிலோ ரூ.130-க்கு விற்பனை
- பொதுமக்கள் அதிர்ச்சி
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர், மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் கர்நாடகாவில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் தக்காளி வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஆந்திரா கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் வேலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.
இதனால் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை மளமளவென 100 ரூபாயை எட்டியது.
மேலும் கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்தது.
நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் காய்கறிகளின் விலைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சிலர் காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளதால் காய்கறிகளை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
கடந்த சில நாட்களாக கிலோ ரூ.90 முதல் 100 வர விற்பனையானது. இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் நேற்று ரூ.100-க்கு விற்கப்பட்ட நடுத்தர வகை தக்காளி இன்று காலை 130 ரூபாய்க்கும், ரூ 80-க்கு விற்கப்பட்ட சிறிய வகை தக்காளி ரூ 100-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






