என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Information to Forest Department"

    • வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • காப்பு காட்டில் விட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள குருராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகேந்திரன் இவருக்கு சொந்தமாக திருமலை குப்பம் பகுதியில் விளை நிலம் உள்ளது.

    இதில் வழக்கமாக பயிர்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று நிலத்தை சுற்றி பார்க்க சுகேந்திரன் சென்றுள்ளார் அப்பொழுது நிலத்தின் நடுவே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுகேந்திரன் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமையிலான குழுவினர் உடனடியாக 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பை மீட்டு அருகே உள்ள சாணம் குப்பம் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    ×