என் மலர்
உள்ளூர் செய்திகள்

508 பெண்கள் திருவிளக்கு பூஜை
- 2-ம் வெள்ளியை முன்னிட்டு நடந்தது
- 1008 எலுமிச்சை பழத்தில் அலங்காரம் செய்யப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உமாமகேஸ்வரி உடனுறையான கைலாயநாதர் கோவிலில் ஆடி மாதம் 2-ம் வெள்ளியை முன்னிட்டு நேற்று 508 திருவிளக்கு பூஜை, கண்ணி பூஜை, சுமங்கலி பூஜை ஆகிய முப்பெரும் பூஜை நடைபெற்றது.
இதில், திருமணம் தடை, குழந்தை பாக்கியம், நோய் நொடி குணமாக, சுமங்கலி பூஜை, கண்ணிப் பூஜை, விளக்கு பூஜை மற்றும் உலக மக்கள் நன்மை வேண்டி 508 சுமங்கலி பெண் பக்தர்கள் விளக்கேற்றி மஞ்சள், குங்குமத்தில் அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர்.
உடனுறையான உமாமகேஸ்வரி அம்மனுக்கு 1008 எலுமிச்சை பழத்தில் சிறப்பு ஆடை அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






