என் மலர்tooltip icon

    வேலூர்

    • ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.
    • ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

    இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரேணூகாதேவி பெருமாள்ராஜா வரவேற்று பேசினர்.

    கூட்டத்தில், அனைத்து வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். தற்போது, அம்ரூத் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கி விட்டதால் கூடிய விரைவில் வீடு தோறும் குழாய் இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிவடையும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் வாசிக்கப்பட்டது.

    அப்போது, பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்ல கடும் நெருக்கடி நிலவி வருகிறது.

    பஸ் நிலையம் விரிவு படுத்துவதால் அதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு களை உடனே அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    டெங்கு கொசுகள் அதிகம் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    15 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி தூய்மை பணிகளை தீவிரப டுத்தி டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன,

    அதேபோல், பழுதாகியுள்ள மின் மோட்டார்கள், தெரு விளக்குகளை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெ டுக்கப்பட்டது. 

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்.

    துணைத் தலைவர் வசீம்அக்ரம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆப்ரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.30 கோடி ஒதுக்கீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ரூ.34.50 லட்சத்தில் ஈரக்கழிவுகள் செயலாக்க பணிகள் மேற்கொள்ளுதல், 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.18.50 லட்சத்தில் 18 வார்டுகளிலும் புதிய கல்வெட்டு அமைத்தல், 5 வார்டுகளில் புதிய போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பாக பொதுமக்கள் இடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடந்தது. இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையம்,வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக, இறுதியில் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    பேரணியில் வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் ,வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, வேலூர் உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தபால் நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 6-ந் தேதியும், ஜவகர்லால்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 7-ந் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி வேலூர் ஊரீசு கல்லூரியில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பு போட்டி அன்று வழங்கப்படும். எனவே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் மாணவர்கள் பேசுவதற்கு தயார் செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிபோதையில் தள்ளாடியபடி கையில் மது பாட்டிலுடன் வந்த ஒருவர் குடி யாத்தம் காட் பாடி தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் அமர்ந்தார்.

    பின் னர் தான் கொண்டு வந்த மது பாட்டிலை திறந்து அதை 3 முறை தொட்டுத் தொட்டு கும்பிட்டார்.

    தொடர்ந்து அங்கேயே மதுவை டம்ளரில் ஊற்றி குடித்தார். இதை ரோட்டில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.

    இது சமூக வலைதளங் களில் வைரலானது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டை பாராக மாற்றி போக்குவரத்துக்கு இடையூறாக அமர்ந்து மது அருந்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கே.வி. குப்பம் சீதாராம்பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் (வயது 64) என்பது தெரிந்தது.

    அவர் மீது கே.வி. குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • கிராம மக்கள் அச்சம்; விடிய விடிய ரோந்து
    • துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு வனப்ப குதியில் ஒற்றை யானை புகுந்தது.

    ஒடுகத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு, கல்லாபாறை, குறவன் கொட்டாய், தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டி சென்றனர்.

    அப்போது ஒற்றை கொம்பன் யானை சுற்றி திரிவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது.

    இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரின் ஆங்காங்கே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது விவசாய நிலங்களில் ஒற்றை கொம்பன் யானை சுற்றி வலம் வருவதால் நேற்று இரவு முதல் வனத்துறையினரின் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானையின் நடமாட்டத்தால் ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வயது முதிர்ந்து காணப்படும் இந்த யானையை யாரும் இடையூறு செய்யக்கூடாது. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தினால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    ஜவ்வாது மலை தொடரை பூர்வீகமாக கொண்டு ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறது.

    அந்த யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் யானையே துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்
    • சமுதாயக்கூடம் கட்டித் தர கோரிக்கை

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது காட்பாடி அருகே பெரியபட்டரையைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை, போர்வெல் பழுதடைந்து 1மாதம் ஆகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதி பொதுமக்களுக்காக 1993-ம் ஆண்டு தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் ஊர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பொது காரியங்கள் செய்வதற்கான மண்டபம் மற்றும் போக்குவரத்து வசதிக்காக சாலைகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த இடத்தில் ஒரு சிலர் தவறான அணுகுமுறையில் பட்டா பெறப்பட்டு அங்கே குடியேறி வீடு கட்டி உள்ளனர்,

    எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கான இடத்தையும் மற்றும் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையும் மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பொது உபயோக இடத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு காரியமண்டபம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லை பாதுகாப்பு படை வீரர் சாலை விபத்தில் பலி
    • உடல் அடக்கம் செய்யப்பட்டது

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 41). இவர் கர்நாடகாவில் உள்ள எஸ்.டி.சி பட்டாலியனில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சாலை விபத்தில் இறந்தார்.

    இதையடுத்து சுதாகர் உடல் நேற்று அலமேலு மங்காபுரம் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மயானத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் முழுங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து சுதாகர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    • பணி சுமையால் விபரீதம்
    • விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டு வர ஏற்பாடு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). இவர் சத்தீஸ்கர் மாநில 19-வது பட்டாலியனில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி வசந்தா. தம்பதியின் மகள் சுஷ்மா (டாக்டர்), மகன் ஜஸ்வந்த் (என்ஜினியர்) உள்ளனர்.

    இந்த நிலையில் குணசேகரன் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருந்த போது துப்பாக்கி யால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப ட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து குணசேகரன் உடலை விமானம் மூலம் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு அரசு மரியாதை யுடன் குணசேகரன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. முதற்கட்ட விசார ணையில் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    • அமைச்சர் துரைமுருகன் பேட்டி
    • ஏரி புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி ஆய்வு

    வேலூர்:

    காட்பாடி கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ரூ.26 கோடி மதிப்பில் புரணமைத்து சுற்றுலாத்தலமாக மாற்றம் பணி நடைபெற்று வருகிறது.

    பணிகளை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் பணிகளின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மனுக்களை கவர்னர் நிராகரிக்கிறார். நானும் எத்தனையோ கவர்னர்களை பார்த்து விட்டேன்.

    இவரை போல் யாரையும் பார்த்தது இல்லை. எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்.

    தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொய்வு இன்றி நடைபெற்று வருகிறது. காவேரி ஒழுங்குகாற்று குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

    அந்த கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    450 பா.ஜ.கவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க. விசாரணை குழுவினர் தெரிவித்தாக கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர்களிடம் அதிகாரம் உள்ளது என துரைமுருகன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவர் தனது வீட்டில் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×