என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால் சிக்கி தவிப்பு"

    • 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு
    • குழாய்களை வெட்டி அகற்றினர்

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் பரிமேலழகர் (வயது 61). புகைப்பட கலைஞர். இவரது மனைவி ஈஸ்வரி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தாசில்தாராக வேலை செய்து வருகிறார்.

    பரிமேலழகர் காலை பைக்கில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வாயிலில் எதிரே வேன் வந்ததால் பைக்கை நிறுத்த கால்களை ஊன்றினர்.

    அப்போது நுழைவுவாயில் தரையில் பொருத்தப்பட்டு இருந்த குழாய்களுக்கு இடையே பரிமேலழகன் கால் சிக்கிக் கொண்டது.இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.

    இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் போலீசார் குழாய்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட பரிமேலழகனை மீட்க முயற்சி செய்தனர்.

    போலீசாரின் முயற்சி தோல்வி அடைந்ததால் இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி இரும்பு குழாய்களை வெட்டி அகற்றினர். பின்னர் பரிமேலழகரை சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது. அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் கடந்த வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டர ஒருவரின் கால் சிக்கிக் கொண்டதால் அப்போது குழாய் வெட்டி எடுத்து அவர் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×