என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் டாக்டர் ஜோதிகுமார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    மாநில செயலாளர் தண்டாயுதபாணி, துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் மூர்த்தி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் வீர வேலு, மாவட்ட அவைத்தலைவர் சாந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட அவைத்தலைவர் சிவாஜி, வடசென்னை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், கரூர் மாவட்ட செயலாளர் பழனிசாமி, விருதுநகர் மாவட்ட செயலாளர் அழகர்சாமி, சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் நாச்சான், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் தேவராஜ், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏழை மக்கள் உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குடும்ப பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். வீட்டுவரி 100 சதவீதம் உயர்த்தும் அறிவிப்பை நிறுத்த வேண்டும்.

    சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    கடும் வெயிலால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. வழக்கமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொது மக்கள் வருவார்கள் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும். மேலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

    கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

    சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.மேலும் சாலையோரங்களில் குளிர்பானங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடும் வெயில் காரணமாக இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். 

    இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகின்றனர்.

    வெளியே உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் நேற்றிரவு பழைய பைபாஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதனை காரில் கடத்தி வந்த பர்கூரை சேர்ந்த தீபா ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் காருடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    பெங்களூரில் இருந்து வேலூருக்கு இந்த குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாநகர பகுதியில் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு பேனர் வைத்து போலீசார் நூதன பிரசாரம் நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் பாதுகாப்பு வசதிக்காகவும் 181 என்ற அவசர அழைப்பு எண் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து எந்தவித தயக்கமும் இல்லாமல் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

    இதுதவிர நூதன முறையில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்பதற்காக உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

    இதன் மூலம் உடனடியாக பணம் மீட்கப்படும். தனியாக நடந்து செல்லும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கவும் வேலூர் மாவட்டத்தில் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் மாநகர பகுதியில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.

    பள்ளி கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.மேலும் தனியாக நடந்து செல்லும் போது ஏதாவது அச்சுறுத்தல் கேலி கிண்டல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் வேலூர் மாநகர பகுதியில் பெண்கள் எந்தவித அச்சமுமின்றி செல்லலாம்.குற்றங்கள் தடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    கடும் வெயிலால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. வழக்கமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொது மக்கள் வருவார்கள் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படும். மேலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

    கடந்த சில நாட்களாக வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

    சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.மேலும் சாலையோரங்களில் குளிர்பானங்கள் விற்பனை களைகட்டியுள்ளது. கடும் வெயில் காரணமாக இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்திருந்தனர். 

    இதனால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தண்ணீர் தாகத்தால் அவதிப்படுகின்றனர்.

    வெளியே உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    குடியாத்தத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர், சமையல் எண்ணெய், பருப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான நூல் மற்றும் சாய மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நெசவாளரணி தலைவர் எஸ்.எம்.தேவராஜி தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட ராகுல்காந்தி புரட்சி பேரவை லாலாலஜபதி, சரத்சந்தர், மாவட்ட செயலாளர் ஏ. கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் நகர நெசவாளரணி தலைவர் கோ.ஜெயவேலு வரவேற்றார்.
    மாநில நெசவாளரணி தலைவர்ஜி.என். சுந்தரவேல் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    மாட்டு வண்டியில் கியாஸ் சிலிண்டர், பைக் ஆகியவற்றை வைத்தும், கார், ஆட்டோ ஆகியவற்றில் கயிறு கட்டியும் இழுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் மாவட்ட நெசவாளரணி பொதுச்செயலாளர் ஜி. நயீம்பர்வேஸ், முன்னாள் மாநில மாணவரணி தலைவர் ஜெ.தியாகராஜன், மாநில நெசவாளரணி பொருளாளர் விமல்காந்த், வக்கீல் பிரிவு நந்தகுமார், மாநில பேச்சாளர்கள் துரைமுருகேசன், அருள், பேரணாம்பட்டு நகர முன்னாள் தலைவர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    வேலூர், சத்துவாச்சாரியில் நாளை முதல் 25-ந் தேதி வரை பகுதிவாரியாக 3 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    வேலூர்:

    வேலூர் மற்றும் சத்துவாச்சாரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 25&-ந்தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் முருகன் தெரிவிதுள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    நாளை திங்கட்கிழமை பூங்கா நகர், ஹரி ௐ நகர், ஒயாசிஸ் ஸ்கூல் தெரு, திருவிக நகர், இளங்கோவடிகள் தெரு, பெரியார் நகர், வள்ளலார் பஸ் நிலையம், சவுத் அவென்யூரோடு தஞ்சம்மாள் மண்டபம் வரை.

    5-ந் தேதி பிஎஸ்என்எல் ரோடு, நடேசன் நகர், ஸ்ரீராம் நகர் மெயின் தெரு ஸ்ரீ ராம் நகர் 8-வது தெரு வார்டன் பொன்னியம்மன் நகர், கிழக்கு மேற்கு ரிவர்பெட் டான் பேக்கரி, தென்றல் நகர் ஏஜி சர்ச் தெரு சென்னை சில்க்ஸ் வரை.

    6-ந் தேதி சிட்டி பேங்க் முதல் சவுத் அவென்யூ ரோடு கடைசிவரை மற்றும் பேஸ்ட் -2முழுவதும், எல் .ஐ. சி .காலனி, காகிதப்பட்டறை, டான்சி சாரதி நகர், செட்டி தெரு, பாலாஜி நகர், சக்தி நகர், அன்பு நகர், காந்தி நகர், நேதாஜி நகர் வரை.

    7-ந் தேதி மெயின் பஜார், ஓ எம் சி தெரு, பி எம் செட்டி தெரு, சுருட்டு கார தெரு, ஈபி நகர், பேஸ் 3, நேதாஜி நகர் மெயின் ரோடு, விவேகானந்தா நகர், விக்னேஷ்வரா நகர், டபுள் ரோடு வரை.

    8-ந் தேதி சத்துவாச்சாரி கோர்ட் மற்றும் ஆவின், சிஎம்சி பம்ப் ஹவுஸ், சுடுகாடு, சத்யா ஷோ ரூம் அருகில் உள்ள பகுதிகள், வசந்தம் நகர் எக்ஸ்டென்ஷன் வரை.

    11-ந் தேதி ஆர்டிஓ ஆபீஸ் ரோடு, நேரு நகர், பேஸ் 2  ஒரு பகுதி, சிவகுமார் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள், அன்பு நகர் ,ஜெயம் நகர் ,குறிஞ்சி நகர், நேதாஜி நகர், கணபதி நகர் வரை.

    12-ந் தேதி முல்லை நகர், மந்தவெளி ரோடு , ராகவேந்திரா நகர் வரை.

    13-ந் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஏபிசிடி குடியிருப்பு, கானாறு தெரு, பெரிய தெரு, ஸ்கூல் தெரு, சாவடி தெரு, ஆற்காடு மெயின் ரோடு வரை.

    16-ந் தேதி பேஸ் 4,5, வாரியார் நகர் மெயின் ரோடு, ஏரியூர் செங்கம் ரோடு, மாதா கோவில் ரோடு, மாருதி நகர், சேவியர் நகர், திருவிக நகர், தியாகராய புரம், செங்கா நத்தம் ரோடு, அலமேலு மங்காபுரம், மூல கொலை வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    வேலூரில் நாளை திங்கட்கிழமை அன்னை தெரசா நகர் சித்தேரி ரோடு பாலிடெக்னிக் கலைவாணர் நகர், ஆர் வி நகர், ஈஸ்வரி நகர், கணபதி நகர் வரை.

    5-ந்தேதி ஜெயராம் நகர், இடையன்சாத்து பகுதி, பெரியார் நகர், 1,2,3 ,வது தெரு, பக்தவச்சலம் நகர், அரசு பொறியியல் கல்லூரி வரை.

    6-ந்தேதி அவ்வை நகர், பலவன்சாத்து ஏரிக்கரை, பெண்கள் ஜெயில், ஆண்கள் ஜெயில், ஆப் கா, ராம் சேட்நகர், சண்முகா நகர் வரை.

    7-ந்தேதி சுடுகாடு சாலை, சித்தேரி சாலை, பத்மாவதி நகர், பழனி நகர், சாரதாநகர், கணபதி நகர், நேதாஜி நகர் ,போலீஸ் குடியிருப்பு, தொரப்பாடி ரெயில்வே கேட், அரியூர் ரோடு, காமராஜ் நகர் 2வது தெரு வரை.

    8-ந் தேதி எஸ் ஆர் எம் நகர், கோவிந்தராஜ் நகர், சிஎம் நகர், சிவில் சப்ளை குடோன், சூலை சபாபதி தெரு, பரசுராமன் முதலியார் தெரு, ரத்தின முதலியார் லே-அவுட், பிள்ளையார் கோவில், சாஸ்திரி நகர் வரை.

    11 -ந்தேதி ராமலிங்க நகர், இடையன்சாத்து ஆரணி ரோடு, பாகாயம் பஸ் நிலையம், ஓட்டேரி பஸ் நிலையம், எம்ஜிஆர் நகர், வளர் நகர், என் கே நகர், முல்லை நகர், ஆனந்தா நகர், சஞ்சீவி புரம், தொரப்பாடி, அல்லாபுரம், காமராஜ் நகர் ,ரஹீம் நகர், ஜகாங்கீர் தோப்பு, ருசி ஓட்டல் வரை.

    12-ந் தேதி சாவடி, விருப்பாச்சிபுரம், காந்திநகர் ,பீங்கான் கம்பெனி ரோடு, ரத்தின கவுண்டர் தெரு ,அண்ணாநகர், ராஜீவ் காந்தி நகர், புண்ணியகோட்டி தெரு ,சாய்நாதபுரம், வள்ளலார் நகர் ஆர் வி நகர் வரை.

    13-ந் தேதி ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, சாமி நகர், ஓட்டேரி ,பார்க், வீராசாமி தெரு, பஸ் டெப்போ, ரிலையன்ஸ் ஸ்மார்ட், ஜெயமுருகன், ஆரணி ரோடு, துளசிங்கம் தெரு வரை.

    16-ந் தேதி இடையப்பட்டி ,கானார், கன்னிகாபுரம் ,முருகன் நகர், சாஸ்திரி நகர் கிருஷ்ணா நகர், போஸ்ட் ஆபீஸ், நாதன் மஹால் ரோடு, அண்ணா சாலை ,வீனஸ் தியேட்டர் ரோடு, தியாகராஜபுரம், பிஷப் டேவிட் நகர் வரை.

    18-ந் தேதி பலவன்சாத்து ஏரிக்கரை, பாறை மேடு ,பெரியார் நகர், காமராஜ் நகர், பாரி தெரு, பஹதுஷா நகர், கோவில் மானியம், எழில் நகர், நெடுஞ்செழியன் தெரு, வாசன் நகர், காந்தி தெரு வரை.

    19-ந்தேதி குளவி மேடு, வாணியங் குளம், வேலப்பாடி ,பிள்ளையார் கோவில் தெரு, யாதவர் தெரு, தாலுகா அலுவலகம், ஆவின் பாலகம், அரசு அச்சகம் வரை.

    20-ந் தேதி சிவராமபுரம், சிதம்பரம் நகர், திலகாம் பாள் தெரு, லாலா சத்திரம், லேடீஸ் ஹாஸ்டல், இந்திராநகர், வாரியார் தெரு, ராமர் பஜனை கோவில் வரை.

    21 -ந்தேதி ராஜா நகர், சின்ன சித்தேரி, சித்தேரி, இடையன்சாத்து, இந்திராநகர், மண்டபத்து சாலை, ஆண்கள் ஜெயில்,பிரின்ஸ் குடியிருப்பு, ராம்சேட் நகர், சண்முகா நகர் வரை.

    22-ந்தேதி தென்றல் நகர், ராஜீவ்காந்தி தெரு ,குமரவேல் நகர், சுற்றுலா மாளிகை ,உழவர் சந்தை, டோல்கேட் வரை.

    25-ந்தேதி எல்ஐசி ஆபீஸ் ரோடு, முனுசாமி பிள்ளை தெரு, டிகேஎம் கல்லூரி பஸ் நிலையம், ௐ டிம்பர்,  வடிவேல் நகர் வரைமின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஜூன் 29 முதல் ஜூலை 3-ந்தேதி வரை வேலூரில் பாலாறு பெருவிழா நடைபெறும் என சக்தி அம்மா தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி திருமண மண்டபத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. 

    சக்தி அம்மா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    கோவில் என்றால் மிகப் பெரிய வீடு என்று அர்த்தம். ஆலயம் என்றால் அன்பு லயத்து இருக்கும் இடத்திற்கு ஆலயம் என்று பொருள். 

    கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். உலகம் முழுவதும் இறைந்து இருப்பதால் இறைவன் என அழைக்கிறோம். இயற்கையை நாம் நேசித்தால் நம்மை இயற்கை நேசிக்கும். 

    எனவே பாலாற்றின் பெருமை குறித்தும் நதிகளின் அருமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது. 

    வரும் ஜூன்  29-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை 5 நாட்கள் பாலாறு பெருவிழா நடக்கிறது. அப்போது ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வேள்வி வழிபாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. 

    பெருவிழா நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாலாற்று அன்னைக்கு பாலாறு நதியில் புனித நீர் கலசங்கள் வேள்வி வழிபாடு 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

    பாலாற்றின் சிறப்பை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே மாதத்தில் நந்தி மலையில் இருந்து தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தில் பவனி வருகிறது. 

    பாலாற்று அன்னையின் பெருமையை போற்றும் வகையில் பாலாற்றங் கரையில் கோவில் கட்டப்பட்டு பாலாற்று அன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெறும் என்றார். 

    நிகழ்ச்சியில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீ  நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மணல், சாராயம், கஞ்சா, குட்கா கடத்திய 1,273 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளசாராயம், மதுவிலக்கு, கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் கள்ளசாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1,048 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 9374 லிட்டர் காய்ச்சுவதற்கு கள்ளசா ராயமும், அக்கள்ளச்சாரயம் பயன்படுத்தப்பட்ட 145 கிலோ கிராம் வெல்லம் மற்றும் 43300 லிட்டர் சாராய ஊறல்களையும், 6425 மதுபான பாட்டில்களையும் கைப்பற்றி அவற்றை அழித்தனர். 

    கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 31 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

    மணல் கடத்திய 136 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொத்தம் 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கஞ்சா தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டு கஞ்சா விற்பனையை பிரதான தொழிலாக கொண்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 52 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,24,400 ஆகும். 

    குட்கா தொடர்பான வழக்கில் மொத்தம் 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றின் மூலம் 160 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1292 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8,93.377 ஆகும்.

    தடை செய்யப்பட்ட லாட்டரி தொடர்பாக மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 16. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 16 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.5210 கைப்பற்றப் பட்டுள்ளது.

    மேற்கண்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 

    ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாகித் பாஷா, ரகு உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
    ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்தலை தடுக்க பஸ், வாகனங்களில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. 

    அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் சம்பவத்தில் இதுவரை  மதுரை  தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கைதாகி வருகின்றனர்.

    இதனால் ஆந்திராவில் இருந்து மதுரை தேனி பகுதிகளுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஆந்திர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    தமிழக போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆந்திராவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் பனிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை வாட்டி வதைக்கும். அதன்படி, இந்த ஆண்டின் வெயில் தாக்கம் கடந்த மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு வெயில் அளவு படிப்படியாக உயர தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் தொடக்கத்தில் 90 டிகிரியை கடந்தது. மார்ச் 11-ம் தேதி 95 டிகிரியாக பதிவானது. அதற்கு அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து வந்த வெயில் அளவு கடந்த 16-ந்தேதி 101 டிகிரியாக பதிவானது.

    தொடர்ந்து 29-ந்தேதி வரை 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது அதற்குப்பிறகு மிதமான தட்பவெப்ப நிலை நிலவியது. தமிழகம் முழுவதும் 3 நாட்கள் வெயிலின் தாக்கம் 3 டிகிரி வரை கூடுதலாக சுட்டெரிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மீண்டும் வெயில் சுட்டெரிக்க நேற்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.

    தமிழகத்தில் வேலூர் உள்பட 7 நகரங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 104 டிகிரி பதிவானது. மதுரை நகரில் 102 டிகிரியும், ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி, தொண்டி, வேலூரில் தலா 101 டிகிரியும் வெப்ப நிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 98 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரியும் பதிவானது.

    தமிழகத்தில் வெயில் நீடித்து வருவதை அடுத்து வெப்ப சலனம் ஏற்பட்டது. அதன் காரணமாக மன்னார் வளைகுடாவில் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல காற்று சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    அதிகபட்சமாக கோடநாடு பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது தாளவாடி சோலையாறு போடி நாயக்கனூர் பகுதியில் பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது.

    பசிபிக் கடல் மட்டத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடல் காற்றில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெயில் கோரத்தாண்டவத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

    வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் அரியலூர் உள்பட பல மாவட்டங்களில் குளிரை அடித்து தூக்கிய வெயில் இனி வரும் நாட்களில் 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிக்கை அளிப்பது வழக்கம்.

    அந்த வகையில் இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பொய்யாக்கும் விதமாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

    தமிழகத்தில் வரும் 2 மாதங்களுக்கு 100 டிகிரியை தாண்டியே வெயில் கொளுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


    ×