என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாற்று அன்னை சிலையுடன் சக்தி அம்மா.
வேலூரில் பாலாறு பெருவிழா
ஜூன் 29 முதல் ஜூலை 3-ந்தேதி வரை வேலூரில் பாலாறு பெருவிழா நடைபெறும் என சக்தி அம்மா தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி திருமண மண்டபத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
சக்தி அம்மா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கோவில் என்றால் மிகப் பெரிய வீடு என்று அர்த்தம். ஆலயம் என்றால் அன்பு லயத்து இருக்கும் இடத்திற்கு ஆலயம் என்று பொருள்.
கடவுள் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கிறார். உலகம் முழுவதும் இறைந்து இருப்பதால் இறைவன் என அழைக்கிறோம். இயற்கையை நாம் நேசித்தால் நம்மை இயற்கை நேசிக்கும்.
எனவே பாலாற்றின் பெருமை குறித்தும் நதிகளின் அருமை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட உள்ளது.
வரும் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 3-ந்தேதி வரை 5 நாட்கள் பாலாறு பெருவிழா நடக்கிறது. அப்போது ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வேள்வி வழிபாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது.
பெருவிழா நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாலாற்று அன்னைக்கு பாலாறு நதியில் புனித நீர் கலசங்கள் வேள்வி வழிபாடு 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பாலாற்றின் சிறப்பை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே மாதத்தில் நந்தி மலையில் இருந்து தீர்த்த கலசங்களுடன் ரத யாத்திரை கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தில் பவனி வருகிறது.
பாலாற்று அன்னையின் பெருமையை போற்றும் வகையில் பாலாற்றங் கரையில் கோவில் கட்டப்பட்டு பாலாற்று அன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெறும் என்றார்.
நிகழ்ச்சியில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீ நாராயணி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






