என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் நிறுவன தலைவர் ஜோதிகுமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் ஆர்ப்பாட்டம்
வேலூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் டாக்டர் ஜோதிகுமார் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாநில செயலாளர் தண்டாயுதபாணி, துணை செயலாளர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் மூர்த்தி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் வீர வேலு, மாவட்ட அவைத்தலைவர் சாந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட அவைத்தலைவர் சிவாஜி, வடசென்னை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், கரூர் மாவட்ட செயலாளர் பழனிசாமி, விருதுநகர் மாவட்ட செயலாளர் அழகர்சாமி, சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் நாச்சான், வடசென்னை மாவட்ட துணை செயலாளர் தேவராஜ், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏழை மக்கள் உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். குடும்ப பெண்களுக்கு ரூ.1000 மாதந்தோறும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். வீட்டுவரி 100 சதவீதம் உயர்த்தும் அறிவிப்பை நிறுத்த வேண்டும்.
சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story






