என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
    X
    வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் முன்பாக விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகர பகுதியில் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு பேனர்

    வேலூர் மாநகர பகுதியில் பெண்கள், மாணவிகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு பேனர் வைத்து போலீசார் நூதன பிரசாரம் நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் பாதுகாப்பு வசதிக்காகவும் 181 என்ற அவசர அழைப்பு எண் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. 

    மேலும் குழந்தைகள் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து எந்தவித தயக்கமும் இல்லாமல் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

    இதுதவிர நூதன முறையில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் பணத்தை மீட்பதற்காக உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

    இதன் மூலம் உடனடியாக பணம் மீட்கப்படும். தனியாக நடந்து செல்லும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் குழந்தைகள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கவும் வேலூர் மாவட்டத்தில் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் மற்றும் மாநகர பகுதியில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்கள் வைத்துள்ளனர்.

    பள்ளி கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.மேலும் தனியாக நடந்து செல்லும் போது ஏதாவது அச்சுறுத்தல் கேலி கிண்டல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் வேலூர் மாநகர பகுதியில் பெண்கள் எந்தவித அச்சமுமின்றி செல்லலாம்.குற்றங்கள் தடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×