search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பு: அரசு சீரான வாதத்தை எடுத்து வைக்கவில்லை- ஜெயக்குமார்

    தமிழகத்தில் போலீசார் அ.தி.மு.க.வினரை ஒழித்துக்கட்ட பயன்படுத்தப்படுகின்றனரே தவிர சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதற்காக அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    தேர்தல் வழக்குகளில் கைதாகி நிபந்தனை ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்தார். பின்னர் சென்னை திரும்பி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இன்று மூன்றாவது நாளாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டபின் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    போலீசாரை தகாத வார்த்தையால் பேசியதாக பெண் கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கண்துடைப்பாகவே தெரிகிறது. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினரே நின்று வெற்றி பெற்றுள்ளனர். தலைமையின் பேச்சை கட்சி நிர்வாகிகளே கேட்பதில்லை என்பதற்கான உதாரணமாகத்தான் இந்த செயல் உள்ளது.

    அவர்கள் இரட்டை குதிரையில் பயணம் செய்கின்றனர். ஒரு பக்கம் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக வேலை செய்கின்றனர். இதற்காகவே வரிசையாக டெல்லி செல்கிறார்கள். அதேபோல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததற்கு தமிழக அரசு இதற்கான வாதத்தை சீராக எடுத்து வைக்காத நிலை மட்டுமே காரணம். தமிழகத்தில் போலீசார் அ.தி.மு.க.வினரை ஒழித்துக்கட்ட பயன்படுத்தப்படுகின்றனரே தவிர சட்ட ஒழுங்கினை பாதுகாப்பதற்காக அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×