என் மலர்tooltip icon

    வேலூர்

    அரியூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஆவாரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 49) விவசாயி. அவருக்கு கவிதா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.இவர் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றார். 

    இந்த நிலையில் நேற்று ஆவாரம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மாந்தோப்பு ஒட்டியுள்ள காலியிடத்தில் கிருபாகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த அரியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருபாகரனுக்கு கவிதா என்ற மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

    இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கவிதா அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் அதே பகுதியை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். 

    கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனின் நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருபாகரன் இறந்து கிடந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில் கிருபாகரன் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    ஆந்திராவில் செல்போன்கள் திருடி வேலூருக்கு பஸ்சில் வந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர்.

    அதில் திருப்பத்தூர் மாவட்டம் உடைய ராஜபாளையத்தை சேர்ந்த முனியப்பன் (வயது 50) அவரது மகன் ராகுல் (19) ஆகியோர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர்.

    அதில் 29 செல்போன்கள் 6 லேப்டாப் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் செல்போன் மற்றும் லேப்டாப் திருடி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. இருவரையும் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து செல்போன் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தாடை பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.அவர்களிடம் முனியப்பன், ராகுல் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் லேப்டாப் ஒப்படைத்தனர்.
    வங்கி கணக்கு புதுப்பிப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.89 ஆயிரம் பறித்தது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம் கார்டு ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு நூதன முறையில் பணம் பறிக்கின்றனர். ஆன்லைன் மூலமாக போலியான முகவரி அனுப்பி வங்கியிலிருந்து விவரங்கள் கேட்பதாக கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். 

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் பலர் இதில் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர்.

    இந்த நிலையில் வங்கி ஊழியரிடம் மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் போலியான முகவரி அளித்து பணமோசடி செய்த சம்பவம் வேலூரில் அரங்கேறி உள்ளது.

    வேலூர் சத்துவாச்சாரி பாலாஜி நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் விஜயசேகரன் (62). இவர் பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் புதுப்பிக்க வேண்டும்.எனவே வங்கி தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

    அதை நம்பிய விஜயசேகரன் குறுந்தகவல் இருந்த இணையதள லிங்கில் சென்று தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரத்து 963 எடுக்கப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போதுதான் குறுந்தகவல் வங்கியிலிருந்து வரவில்லை என்றும் மர்மநபர் அனுப்பியது என்றும் அவருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41- வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவை யொட்டி 4-ந் தேதி கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் உற்சவமும், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடந்தது. 

    இன்று காலை கொடியேற்றத் துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து காலையில் சாமி வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ளன.

    இன்று கொடியேற்றத்தை யொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 7,8,9,10,ம் ஆகிய தேதிகளில் காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திர சேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    11-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது. 13-ந்தேதிண மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 14-ந் தேதி காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடும், 14-ந் தேதி புருஷா மிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

    15-ந் தேதி காலையில் நடராஜருக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

    16-ந் காலையில் பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். 

    17-ந் தேதி விடையாற்றி உற்சவம், 18-ந் தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ நடப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இருக்கின்றன.
    காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் கட்டிட மேஸ்திரி பிணமாக மீட்கப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக கழிஞ்சூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மலர். 

    தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முனீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் மணிகண்டன் பிணமாக மிதந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

    சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மணிகண்டன் குடிபோதையில் தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மாடுகளை கையாளும் தேர்வில் டிப்-டாப் உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். டிப்டாப் உடையில் மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனர்.

    வேலூர்:

    கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பதவிக்கு நேர்காணல் இன்று வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    22 பதவிகளுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்காணல் உதவி ஆணையர் வெங்கட்ராமன் மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    வருகிற 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 400 பேருக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை 400 பேருக்கும் என 2 வேளையாக நடைபெற்றது.

    சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், மாடுகளை கையாளுதல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்தப் பதவிக்கு 10-ம் வகுப்பு அடிப்படைத் தகுதியாகும். ஆனால் இதற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள். அதிலும், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி. ஏ., என்ஜினீயரிங் பட்டதாரிகள் போன்றவர்கள் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

    மாடுகளை கையாளும் தேர்வில் டிப்-டாப் உடையணிந்த ஏராளமான பட்டதாரிகள் கலந்துகொண்டனர். டிப்டாப் உடையில் மாடுகளை கட்டியும் லாவகமாக ஓட்டியும் காண்பித்தனர்.மேலும் அவர்கள் சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.

    இதேபோல ஏராளமான இளம்பெண்களும் இதில் கலந்து கொண்டனர். அவர்களும் மாடுகளை கையாண்டும், சைக்கிள் ஓட்டியும் காண்பித்தனர்.

    3 ஆண்டுக்குப் பிறகு பொய்கை வாரச்சந்தையில் சுங்க கட்டணத்தை அதிகாரிகள் வசூல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் மாடு ஆடு கோழிகள் மற்றும் பறவைகள் அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

    மாலையில் வார சந்தை நடக்கிறது. சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆண்டு தோறும் சுங்க கட்டணம் குறித்து ஏலம் விடப்படுகிறது.கடந்த 2018 &19ம் ஆண்டில் சுங்க வரிவசூல் ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது.

    அதற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக ஏலம் விடப்பட்டது.அதில் அரசு நிர்ணயித்த தொகையை விட குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டனர். இதனால் 3 ஆண்டுகளாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் பொய்கை வாரச்சந்தையில் அதிகாரி களை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் 30&க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பொய்கை சந்தையில் வியாபாரிகளிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்தனர்.

    2 மாடுகளை ஏற்றி வரும் வாகனத்திற்கு ரூ.110 வசூல் செய்தனர். 4 மாடுகளை ஏற்றி வந்தால் ரூ.210 ஒரு கோழி விற்பனை செய்ய ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மேலும் அங்குள்ள கடைகளுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு பொய்கை வாரச்சந்தையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ததால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வதால் பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
    வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

    மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தாஸ், பி.எஸ்.பழனி, மாணவரணி துணை செயலாளர் எம்.டி. பாபு, இளைஞரணி ராகேஷ், ஜெயலலிதா பேரவை அமர்நாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் சுபாஷ்,  துர்காசுரேஷ், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, அன்வர்பாட்ஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை, 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது, 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும், குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையிலும், வாலாஜாவில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கூட்டுறவு துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி  மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மனு அளித்தனர். 

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் சாஸ்திரி நகரில் பகுதி நேர ரேசன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-&க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர்.செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டுமே ரேசன் கடை திறக்கப்படுகிறது. 

    இதனால் 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    பலர் கூலித் தொழிலாளர் களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படு கின்றனர்.

    பகுதி நேரமாக செயல்படும் இந்த கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழு நேர ரேசன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
    வேலூரில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலாஸ் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22). இவர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் பானி பூரி சாப்பிட சென்றார். சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்திருந்தனர்.

    அப்போது முகமது, விக்னேஷ் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் முகமது மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷை தாக்கியுள்ளனர்.

     விக்னேஷ் இதுகுறித்து அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் காட் வின் (20) ஆகாஷ் (19)மற்றும் 3 சிறுவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முகமது மற்றும் அவரது நண்பர்களை தாக்கினர்.

    பானி பூரி சாப்பிட வந்த இடத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முகமது அவரது நண்பர்கள் மகபூப்பாஷா, அமீர், பையதுல்லா, பைரோஸ் மற்றும் விக்னேஷ், காட்வின் ஆகாஷ் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 11 பேரை கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    பெங்களூரிலிருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வர படுகின்றன இதனை தடுக்க சுங்கச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 35 மூட்டைகளில் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

    இந்த குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது வேன் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாவாய் சிங் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் குட்கா பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காட்பாடி அருகே ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்தனர்.

    அவர் விழுப்புரம் மாவட்டம் மட்டப்பாறையை சேர்ந்த யுவராஜ் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வந்து அங்கிருந்து விழுப்புரத்திற்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×