என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்
வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வேலூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயபிரகாஷ், உமா விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தாஸ், பி.எஸ்.பழனி, மாணவரணி துணை செயலாளர் எம்.டி. பாபு, இளைஞரணி ராகேஷ், ஜெயலலிதா பேரவை அமர்நாத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் சுபாஷ், துர்காசுரேஷ், பகுதி செயலாளர்கள் குப்புசாமி, அன்வர்பாட்ஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், பொதுமக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை, 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தற்போது, 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பதை கண்டித்தும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலும், குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையிலும், வாலாஜாவில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story






