என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  வங்கி கணக்கு புதுப்பிப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.89 ஆயிரம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கி கணக்கு புதுப்பிப்பதாக கூறி ஓய்வு பெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.89 ஆயிரம் பறித்தது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேலூர்:

  வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம் கார்டு ரகசிய எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு நூதன முறையில் பணம் பறிக்கின்றனர். ஆன்லைன் மூலமாக போலியான முகவரி அனுப்பி வங்கியிலிருந்து விவரங்கள் கேட்பதாக கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். 

  இது குறித்து சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் பலர் இதில் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர்.

  இந்த நிலையில் வங்கி ஊழியரிடம் மர்ம நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் போலியான முகவரி அளித்து பணமோசடி செய்த சம்பவம் வேலூரில் அரங்கேறி உள்ளது.

  வேலூர் சத்துவாச்சாரி பாலாஜி நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் விஜயசேகரன் (62). இவர் பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

  இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் புதுப்பிக்க வேண்டும்.எனவே வங்கி தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

  அதை நம்பிய விஜயசேகரன் குறுந்தகவல் இருந்த இணையதள லிங்கில் சென்று தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரத்து 963 எடுக்கப்பட்டது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போதுதான் குறுந்தகவல் வங்கியிலிருந்து வரவில்லை என்றும் மர்மநபர் அனுப்பியது என்றும் அவருக்கு தெரியவந்தது.

  இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×