என் மலர்
வேலூர்
வேலூரில் போலீசாருக்கு 13 புதிய ரோந்து வாகனங்கள் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வழங்கினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது வேலூர் மாவட்டத்தில் 5 கார்கள் உள்பட 37 ரோந்து வாகனங்கள் உள்ளன. இன்று கூடுதலாக 13 ரோந்து பைக் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.
மேலும் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள வாகனங்-களில் ஜிபிஎஸ் கருவிகள் அலாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த வாகனங்கள் வேலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் ரோந்து வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
எங்காவது அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக ரோந்து வாகனத்தில் செல்லும் போலீசாரை அனுப்பி உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் உதவியுடன் ரூ.8.57 கோடி முறைகேடு நடந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
அவர்கள் நடத்திய விசாரணையில் ரூ.8.57 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது.
இது தொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணா-மலை மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.8 கோடி அளவிற்கு நெல்கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்துள்ளனர்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்நது.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனிநபர் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.57.82 லட்சம் அளவிற்கு நெல் கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஏ.கே.படவேட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகள் தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்-கினார்.
இதனையொட்டி திருநங்கைகளுக்கு கோலப் போட்டி நடனப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் திருநங்கைகள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
இதில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கலெக்டர் பரிசு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் திருநங்கை-களுக்கு தொழில் கடன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. அவர்கள் வாழ்வில் முன்னேற தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ஆர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமார், சமூகநலத்துறை அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
அவர்கள் நடத்திய விசாரணையில் ரூ.8.57 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது.
இது தொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.8 கோடி அளவிற்கு நெல்கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்துள்ளனர்.
இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனிநபர் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.57.82 லட்சம் அளவிற்கு நெல் கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

விரிஞ்சிபுரம்- வடுகன்தாங்கல் இடையே ரூ.29.50 கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் வடுகன்தாங்கல் விரிஞ்சிபுரம் ரெயில்வே மேம்பாலம் ரூ.29.50 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதனை முதல்&அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மேம்பாலத்தில் கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த ரெயில்வே மேம்பாலம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன்மூலம் விரிஞ்சிபுரம் வடுகன்தாங்கல் இடையே பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் இந்த பாலம் வசதியாக அமைந்து உள்ளது. மேலும் வடுகந்தங்கள் லத்தேரி பனமடங்கி பகுதிகளில் இருந்து வேலூர் அணைக்கட்டு பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடியும்.
இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விரைந்து சென்று வர முடியும். பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வசதிக்காக இந்த வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல லத்தேரி மற்றும் கரசமங்கலம் பகுதியிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்&சித்தூர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் துறைசார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் துறை அதிகாரிகளிடம் பணிகள் விரைந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்துகூட்டத்தில் பேசிய கலெக்டர் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பண்ணை குட்டை பணிகளில் நிலுவையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணிகளை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்த குறித்தும் ஆலோசனை நடத்தினார்,
குடியாத்தம் சித்தூர் சாலை, வேலூர் பள்ளிகொண்டா சாலை, பேரணாம்பட்டு செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடியாத்தம் சித்தூர் செல்லும் சாலையில் உள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
விவசாயிகளுக்கு உரக்கடையில் தேவையான அளவு உரங்கள் கிடைக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு உரங்கள் விற்கும் போது வேறு பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது.
மேலும் கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து இருப்பு குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் உரக்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன மற்றும் தவறவிட்ட 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும்.
வேலூர் மாவட்டம் அல்லேரி பீஞ்சமந்தை மலைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட்டுள்ளது. மீறி கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனம் திருந்தி வந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கி தொழில் செய்ய உதவி செய்யப்படும். மலை கிராமங்களில் நக்சலைட்டுகளை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செல்போன்கள் பைக் திருட்டு குறித்து புகார் அளித்த 30 நிமிடங்களுக்குள் போலீசார் சிஎஸ்ஆர் அல்லது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மீறினால் போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.
3 மாதங்களில் திருடுபோன 60 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 செல்போன்கள் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.. மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 42 போலீஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தினமும் நான் அந்த வழியாக அலுவலகத்திற்கு வந்து செல்வேன்.
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பூபதி ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர்ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் திடீர் பள்ளத்தில் செங்கல் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. ஆபிஸ் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் தற்போது தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
தார் சாலையில் ஈரப்பதத்துடன் காணப் படுகிறது. இந்தநிலையில் அந்த பகுதியில் காலியான இடத்தில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.
இதற்காக லாரி ஒன்று செங்கல் ஏற்றி ஆர்.டி.ஓ. ரோட்டிற்கு வந்தது. 4 முனை சந்திப்பில் லாரி வந்தபோது தார்சாலை போடப்பட்டுள்ள இடத்தில் லாரி சென்றதால் சக்கரத்தின் அழுத்தம் காரணமாக தார் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதில் இறங்கியது.
இதனால் லாரியை மீட்க முடியாமல் அவதியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் போக்குவரத்து சரி செய்யப்பட்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தார்சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் சதுப்பேரி ஏரி உபரி நீர் கால்வாயில் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் கொண வட்டம் பகுதியில் சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து 150 வீடுகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.இந்த வீடுகளை இடிக்கும் பணி கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது.
உபரி நீர் கால்வாய் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாயில் கலந்து அங்கிருந்து பாலாற்றுக்கு உபரி நீர் செல்கிறது.
மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை இடிக்க முடிவு செய்துள்ளனர். இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிக்கல்சன் கால்வாய் பகுதியில் முழுமையாக வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்படவில்லை.
சில வீடுகளில் சுவர்கள் மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.அவற்றை மட்டுமே இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து முறையான அளவீடு செய்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிக்கல்சன் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து வரைபடம் மூலம் அளவீடு செய்தனர். கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள எந்த கட்டிடமாக இருந்தாலும் இடித்து அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் மாங்காய் மண்டி பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களும் அதனைத் திறக்க கோரி ஆண்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை கடந்த வாரம் திறக்கப்பட்டது.
குறிஞ்சி நகர், முல்லை நகர், நேதாஜி நகர், மந்தைவெளி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. டாஸ்மாக் கடையை ஒட்டியே ஏராளமான வீடுகள் உள்ளன.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால், அப்பகுதி மக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். மதுப்பிரியர்கள் போதையில் தெருக்களில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச் செல்வார்கள். திருட்டு வழிப்பறி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடை மூடப்பட்டது.
இந்நிலையில், அந்த பகுதியில் டாஸ்மாக் கடை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க கடைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது . இது அப்பகுதி மக்களிடம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மாதர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்களிடம் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையால் பெண்கள், மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும். உடனடியாக இதனை மூட வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த 25-க்கும் மேற்பட்ட ஆண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை பாலாற்று பகுதிக்கு விரட்டினர். அப்போது குடிமகன்கள் எங்களால் தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. நாங்கள் குடிக்கவில்லை என்றால் இலவச திட்டங்களை அமல்படுத்த முடியாது. எனவே டாஸ்மாக் கடையை மூடக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. குடிமகன்கள் 3 பேரை போலீசார் சட்டையை பிடித்து இழுத்து வந்தனர்.
அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து வேண்டும் வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும் என கோஷமிட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 லாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
வேலூர்:
நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வேலூரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.112.16-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.22-க்கும் விற்பனையானது. இதனால் தினசரி காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 லாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டீசல் விலையேற்றத்தால் லாரி தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், லாரிகளுக்கு சரக்குகள் கிடைப்பதிலும், அவ்வாறு சரக்குகள் கிடைத்தாலும் வாடகையை உயர்த்திப்பெற முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தைவிட கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.9 வரை குறைவாக விற்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் வாட் வரியை மாநில அரசு குறைத்ததன் காரணமாக இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது. டீசல் நிரப்புவதற்காக தமிழக லாரிகள் கர்நாடகம், புதுச்சேரிக்கு அதிகளவில் சென்று வருகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.102.22-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேசமயம், கர்நாடகத்தில் ரூ.7-ம், புதுச்சேரியில் ரூ.9-ம் டீசல் விலை குறைவாகும். இதனால் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள், கர்நாடக எல்லை வரை தேவையான டீசல் மட்டுமே போட்டுக்கொண்டு சென்று, பின்னர் கர்நாடக மாநில பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பிச் செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவுக்கு டீசல் மிச்சப்படுத்த முடிகிறது.
இதேபோல், புதுச்சேரியையொட்டி உள்ள மாவட்டங்களில் உள்ள லாரிகள், டீசல் நிரப்ப அதிகளவில் புதுச்சேரிக்கு சென்று வருகின்றன.
இதனால் தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசுக்கும் டீசல் மூலம் கிடைக்கும் வரும் வரி வருவாயில் பெரும் இழப்புதான் ஏற்பட்டு வருகின்றன.
எனவே அண்டை மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விலையேற்றம் மக்கள் மீதே பெரும் சுமையாக மாறக்கூடும் என்றார்.
திருவலம் அருகே ஆண்டுதோறும் 9 நாட்கள் மட்டும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. ஈசானிய வாயில் படியை கொண்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டார் என தல புராணத்தில் கூறப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி உத்திரம் உத்திராயண காலத்தில் (பங்குனி 23-ந்தேதி முதல் சித்திரை 1-ந்தேதி வரை) 9 நாட்கள் காலை 6-15 மணி முதல் 6-45 மணி வரை இங்குள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பான தொரு அதிசய நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த கோவிலை தரிசனம் செய்தால் 7 பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என கூறப்படுகிறது.
இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த சூரிய ஒளி விழும் நிகழ்ச்சியினை காண வருகை தருகின்றனர்.
வான சாஸ்திரம் எவ்வித அறிவியல் தொழில் நுட்பங்களோ, நவீன உபகரணங்களோ இல்லாத அந்த காலங்களில் வான சாஸ்திரத்தை துல்லியமாக ஆராய்ந்து வருடத்தில் பங்குனி மாதம் 9 நாட்களில் மட்டும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழும் வகையில் இந்த கோவிலை கட்டியிருப்பது தமிழர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.
இந்த கோவிலில் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புறமுள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து. கோவிலில் உள்ள 3 பிரகாரங்களை கடந்து சிவலிங்கத்தின் மீது விழுகிறது. முதலில் சிவலிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக சிவலிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது.
இதையடுத்து கீழே இறங்கி மறைந்து விடுகிறது.திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகள் அனைத்தும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது. இன்று காலை 6-20 மணிக்கு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது.
6-45 மணிக்கு சூரிய ஒளி மறைந்து விட்டது.இந்த அரிய நிகழ்வை பார்த்து வழிபட்ட திரளான பக்தர்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும்போது தீபாராதனை காட்டி நமச்சிவாய என்றும், தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றும் பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
வேலூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலை விலும், காட்பாடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4-45 மணிக்கு விண்ணம்பள்ளி செல்லும் அரசு பஸ்சில் சென்று விண்ணம்பள்ளியில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் கோவிலை அடையலாம். அல்லது சென்னை- சித்தூர் சாலையில் சேர்க்காடு கூட்ரோட்டில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம்.
சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும்.
சூரிய ஒளி விழும் அதிசய கோவில் உள்ள இப்பகுதியை சுற்றுலாதலமாக்கி, போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்தினால் பக்தர்கள் எண்ணிக்கை பெருகும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.