search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்ட காட்சி.
    X
    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்ட காட்சி.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 41- வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவை யொட்டி 4-ந் தேதி கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் உற்சவமும், நேற்று மாலை 6 மணிக்கு ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடந்தது. 

    இன்று காலை கொடியேற்றத் துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து காலையில் சாமி வீதி உலா நடந்தது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப் பட்டுள்ளது. கோட்டை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    வெயில் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள் கோவில் வளாகத்தில் விரிக்கப்பட்டுள்ளன.

    இன்று கொடியேற்றத்தை யொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 7,8,9,10,ம் ஆகிய தேதிகளில் காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திர சேகரர் புறப்பாடும், மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது. 

    11-ந் தேதி 63 நாயன்மார்கள் உற்சவமும், 12-ந்தேதி காலையில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது. 13-ந்தேதிண மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 14-ந் தேதி காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடும், 14-ந் தேதி புருஷா மிருக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

    15-ந் தேதி காலையில் நடராஜருக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கிறது.

    16-ந் காலையில் பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் புஷ்ப பல்லக்கும் நடைபெறும். 

    17-ந் தேதி விடையாற்றி உற்சவம், 18-ந் தேதி உற்சவ சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ நடப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய இருக்கின்றன.
    Next Story
    ×