என் மலர்tooltip icon

    வேலூர்

    • 3 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 63). இவர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காததால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதையடுத்து உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் உதவியுடன் சந்திரசேகரை இன்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை அதிகாலை வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் தீ எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரசேகர் இறந்தார். டிரைவர் உட்பட 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 11 வாகனங்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த பல மாதங்களாக தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் பழனி, மோசஸ் கொண்ட தனிப்படையினர் பைக் திருட்டு சம்பவங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதை தொடர்ந்து நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே பைக்கில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 26) என்பதும் கட்டிட தொழிலாளி என்பதும் பகலில் கட்டிட வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

    இதனையடுத்து மோகன்ராஜ் அளித்த தகவலின் பேரில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் அவரிடம் இருந்து மீட்டனர்.

    மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மோகன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் வருகிற 31ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு போலீசாருக்கு தெரியாமல் சிலைகள் வைக்கக்கூடாது, விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்பது உள்பட சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    இதில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகள் வைப்பவர்கள், செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • பாதுகாப்பு பணிகள் ஆய்வு
    • அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை

    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது‌. விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தின் போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பிக்கள், டி.எஸ்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் பாதுகாப்பு அளிக்க மனு
    • கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, தாசில்தார் நேரில் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    கன்சால் பேட்டையில் 46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கன்சால்ப்பேட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

    கடந்த மாதம் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் கன்சால் பேட்டையில் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள 46 குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் நாளை கன்சால்பேட்டையில் உள்ள 46 வீடுகளையும் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

    நாளை காலை 10 மணிக்கு கன்சால் பேட்டையில் உள்ள 46 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பராமரிப்பு பணிகள் குறைபாடு என குற்றச்சாட்டு
    • ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை

    வேலூர், ஆக.17-

    சென்னையில் இருந்து காட்பாடி ஜோலார்பேட்டை சேலம் ஈரோடு வழியாக கோவை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவையை நோக்கி புறப்பட்டது.

    அறுந்து விழுந்தது

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் அருகே வந்த போது உயர்மின் அழுத்த கம்பி திடீரென அறுந்து ரெயில் மேல் விழுந்தது.

    இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்னையில் இருந்து வந்த திருவனந்தபுரம், லால்பாக், ரெயில் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் 15 பேர் கொண்ட மின் பொறியாளர் குழுவினர் டவர் வேகன் வண்டியை கொண்டு அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பயணிகள் அவதி

    சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு மின் கம்பி சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது.இதனால் ரெயில்கள் 1.45 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதை தடுக்க ரெயில்வே நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சரியான சீரமைப்புகள் இல்லாததால் இதுபோன்று மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. பராமரிப்பு பணிகளில் குறைபாடு ஏற்பட்டதால் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்க மின் கம்பிகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    மின் கம்பிகள் அறுந்து விழக்காரணம் என்ன என்பது குறித்து காட்பாடி ரெயில்வே மின்கம்பி பராமரிப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 பிரிவுகளின் கீழ் விருது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இந்த ஆண்டு விருது வழங்குவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் வருகின்ற 26- ந் தேதிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உலக சுற்றுலா தினமான 2-ந்தேதி அன்று வழங்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவை சேர்ந்த அவரது மாமா மனோகரன் என்பவரது வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
    • தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் பள்ளிக்கு செல்வது பிடிக்கவில்லை என சதீஷ் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    வேலூர்:

    சென்னை ஆர்.கே. நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர் மகன் சதீஷ் (வயது19). இவர் சென்னையில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தார். இதில் தேர்ச்சி பெறவில்லை.

    இதனை தொடர்ந்து மீண்டும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர் அவரை காட்பாடி காங்கேநல்லூர் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் பிளஸ்-1 வகுப்பில் சேர்த்தனர்.

    வேலூர் காகிதப்பட்டறை தலையாரி மானியம் தெருவை சேர்ந்த அவரது மாமா மனோகரன் என்பவரது வீட்டில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.

    தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் பள்ளிக்கு செல்வது பிடிக்கவில்லை என சதீஷ் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது மாமா வீட்டில் 2-வது மாடியில் உள்ள அறைக்கு சென்ற மாணவன் சதீஷ் அங்குள்ள மின்விசிறியில் தூக்கில் தூங்கினார்.

    இதனைக் கண்டு அவரது உறவினர்கள் சதீஷை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டினர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சலவன் பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). மாட்டு வண்டி தொழிலாளி. இவர் நேற்று காலை 11 மணிக்கு கோட்டை பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.

    இது குறித்து சரவணன் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷியாமலா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (19) கோட்டை பின்புறம் உள்ள நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (34) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீர்பாட்டிலால் தாக்கி துணிகரம்
    • 2 பேர் கைது

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 29) கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர் மோகன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு காட்பாடி செங்குட்டையிலிருந்து பள்ளி குப்பத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செங்கோட்டை பகுதியை ஒட்டி உள்ள மைதானம் அருகே சென்ற போது 3 பேர் அவர்களை மடக்கினர்.

    அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நந்தகுமாரிடம் பணம் கேட்டனர். அவர் பணம் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். அவரது செல்போனை பிடுங்கினர். அதனை பரிசோதித்த கும்பல் செல்போனில் ஜிபே உபயோக படுத்துவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த செல்போனில் இருந்து நந்தகுமாரை மிரட்டி ரூ.2 ஆயிரத்தை அவர்களது ஜிபே எண்ணுக்கு மாற்ற செய்தனர்.

    அவர்களது அக்கவுண்டுக்கு பணம் வந்த பிறகும் நந்தகுமாரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து நந்தகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரூ.2000 பரிமாற்றம் செய்யப்பட்ட செல்போன் ஜிபே எண் மூலம் துப்புத் துலக்கினர்.

    இதில் அந்த எண் செங்குட்டையை சேர்ந்த பிரவீன் (28) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் பிரவீனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் பிரவீன் அவரது நண்பர் கவுதம் (26) மற்றும் ஜேக்கப் ஆகியோருடன் சேர்ந்து நந்தகுமாரை தாக்கி ஜிபே மூலம் பணம் பறித்தது தெரியவந்தது.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரவீன் மற்றும் கவுதமை கைது செய்தனர். ஜேக்கப்பை தேடி வருகின்றனர்.

    தொழிலாளியை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு
    • சிறைத்துறை அதிகாரிகள் உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டனர்

    வேலூர்:

    அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிக ளின் தண்டனையை நல் லெண்ணம் மற்றும் மனி தாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவ டிக்கை மேற்கொள்ளும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    10 ஆண்டு சிறைவாசம் முடித்தவர்கள், குறிப்பாக சிறைவாசியின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல், முறை கேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரானகுற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற் பனை செய்தல், வனம் குறித்த தொடர் குற்றங்க ளில் ஈடுபட்டவர்கள், ஒருவ ருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனைபெற்றவர்கள், சாதி மற்றும் மதரீதியான வன்முறையில் ஈடுபட்ட வர்களுக்கு முன்விடுதலை அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

    முன்விடுதலை அளி கப்படுவதை, மாநில அள வில் டிஜிபி அல்லது சிறைத் துறை தலைவர், சிறைத் துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் குழுவினர் மாவட்ட அளவில் மத்திய சிறையின் கண்காணிப்பா ளர் தலைமையிலான குழு, மண்டல அளவில், மண் டல சிறைத்துறை டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து பட்டியலை மாநில அளவிலான குழு வுக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலூரில் 47 பேருக்கு தகுதி

    அதன்படி வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனு பவித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படை யில் 47 கைதிகளை விடு தலை செய்ய பரிந்துரை குழு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் ஜெயில்களில் தண்டனை அனுப வித்து வரும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படை யிலான கைதிகளை நேற்று முதல் விடுதலை செய்ய லாம் என்று சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

    வேலூர் ஜெயிலில் இருந்து நேற்று இரவு முதற்கட்டமாக 5 நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களிடம் சிறைத்துறை அதி காரிகள் உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    விடுதலையான 5 பேரும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். இதில் ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேலும், 4 பேர் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்துள்ளனர்.

    • வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை நிறுத்தம்
    • பணி முடிந்ததும் குடிநீர் விநியோகம்

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதில் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது.

    இதனால் பச்ச குப்பத்தை தாண்டி காவிரி குடிநீர் சரிவர வரவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் முடியவில்லை. இதனால் குழாயில் வரும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.

    இன்று 2-வது நாளாக குடிநீர் குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணி நடந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:-

    பச்சகுப்பம் பாலாற்றில் காவிரி குடிநீர் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. வெல்டிங் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.

    இன்று மாலை பணி முடிந்துவிடும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்கம் போல காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றனர்.

    ×