என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் ஆரணி டி.எஸ்.பி. பேசிய காட்சி.
போலீசாருக்கு தெரியாமல் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது
- டி.எஸ்.பி. எச்சரிக்கை
- சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் வருகிற 31ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு போலீசாருக்கு தெரியாமல் சிலைகள் வைக்கக்கூடாது, விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்பது உள்பட சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இதில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகள் வைப்பவர்கள், செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.






