என் மலர்tooltip icon

    வேலூர்

    • மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    நான் லாரியில் செங்கல் மணல் ஓட்டி வருகிறேன் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 3 சீட்டுகளுக்கு மாதந்தோறும் 25,000 கட்டி வந்தேன். திடீரென அவர்கள் சீட்டு பணம் தர மறுத்து விட்டனர்.

    2 சீட்டுகளுக்கான தொகை ரூ.9,20,000 அவர்கள் தர வேண்டியிருந்தது. பின்னர் 4 லட்சத்து 52 ஆயிரத்து 300 மட்டும் தந்தனர்.மீதி ரூ.4,67,700 பணத்தை தரவில்லை. இது பற்றி கேட்டால் என்னை அவதூராக பேசி மிரட்டல் விடுக்கிறார்கள். எனக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக சீட்டு பணம் கட்டினேன்.

    எனது பணத்தை மீட்டு தந்து மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் இன்று காலை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மண்டல செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம், தனசேகரன், சுந்தரராஜன், சாம்ராஜ், நாராயணன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பி.பி.2 முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை வெளி நபர்களுக்கு விடுவதை திரும்ப பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மின் ஊழியர்கள் போராட்டத்தால் மின்வாரிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஆட்டை கடித்து கொன்றது
    • நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர் அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்து வருகின்றனர்.

    இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது. அங்கு வசிக்கும் விவசாயிகள் தவமணி, கணபதி ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த பெரிய ஆடு மற்றும் குட்டி ஆடு, கன்று குட்டியை 2மாதங்களுக்கு முன்பு முன்தினம் சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரம் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிக்கும் முனிரத்தினம் விவசாயி இவர் வீடு நிலத்தில் இருப்பதால் பாதுகாப்பிற்காக வீட்டில் நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

    இரவு நேரங்களில் சிறுத்தைகள் இவர் வசிக்கும் வீட்டு அருகே உலா வருமாம் அந்த சிறுத்தைகள் அவரின் வளர்ப்பு நாய் கடந்த வாரம் கடித்துக் கொன்றுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன் இதே பகுதியான கல்லப்பாடி தோனிகான் பட்டியில் வசிக்கும் கணபதியின் ஆட்டை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை பெரிய சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றுள்ளது ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட கணபதி குடும்பத்தினர் சத்தம் கேட்ட திசையில் ஓடி சென்றபோது பெரிய சிறுத்தை ஆட்டின் கழுத்தை கல்வி இழுத்து செல்வது தெரிய வந்தது.

    உடனே இவர்கள் கூச்சலிட்டு சத்தம் எழுப்பியதும் சிறுத்தை ஆட்டை விட்டு விட்டு ஓடிவிட்டது உடனடியாக அந்த ஆட்டை கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.நேற்று காலையில் அந்த ஆடு பரிதாபமாக இறந்து விட்டது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே வளர்ப்பு நாய் மற்றும் ஆட்டை சிறுத்தைகள் கொன்ற சம்பவத்தால் தோனி கான்பட்டி பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உயிருக்கு பயந்தபடி வாழ்ந்து வருகின்றனர்.

    • பைக், மானின் தோல்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 38) என்பவர் ராமாலை சுரைக்காய் பள்ளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து கடலை பயிரிட்டு வந்துள்ளார்.

    அப்பகுதியில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுந்தரம் வயரால் நிலத்தில் பல இடங்களில் கன்னிகள் அமைத்து வைத்திருந்து உள்ளார்.

    நேற்று இரவு அந்த நிலத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் புள்ளிமான் ஜோடி ஒன்று அந்த கன்னியில் சிக்கி உள்ளது.

    காலையில் சென்ற சுந்தரம் அந்த கன்னியில் சிக்கி இருந்த 2 மான்களை கொன்று அதன் இறைச்சியை துண்டுகளாகி விற்பனை செய்ய இருந்த போது வனத்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது.

    விரைந்து சென்ற குடியாத்தம் வனத்துறையினர் சுந்தரத்தை பிடித்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மான் இறைச்சியும் 2 புள்ளி மான்களின் தோள்களும் இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்திகள் எடைத்தராசு கம்பிகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வனத்துறையினர் சுந்தரம் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப் பகுதிகளில் தீவிர வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு மான்கறி விற்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

    • கூடுதல் கேமராக்கள் பொருத்த உத்தரவு
    • அலட்சியங்களை தடுக்க நடவடிக்கை

    வேலுார்:

    வேலூர் மாவட்டத்தில் வேலுார், காட்பாடி, குடியாத்தம் என 3 சப் டிவிஷன்கள் அமைந் துள்ளது. இங்கு 32-க்கும் அதிகமான போலீஸ் நிலையம் உள்ளன. இது தவிர்த்து, மதுவிலக்கு அமல் பிரிவு, குற்ற ஆவண மாவட்ட காப்பகம், குற்றப் பிரிவு, நில அப கரிப்பு தடுப்பு பிரிவு உட்பட பல துறைகள் இயங்கி வருகிறது.

    இவை அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த அலுவலகங்களில் பணம் கொடுக்கல், வாங்கல், கட்டப்பஞ் சாயத்து செய்வது, புகார் கொடுக்க வரும் மக்களை அலட்சியமாக நடத்துவது என பல செயல்கள் சிசி டிவி கேமராக்கள் பார்வை படாத இடங்களில் நடந்து வருகிறது.

    இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் ஒரு பலனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், அவரின் கட் டுப்பாட்டில் அமைந்துள்ள அனைத்து நிலையங்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளார்.

    பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவை, எஸ்.பி அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட் டுள்ள ஒரு கட்டுப்பாட்டு அறையில் ஒன்றிணைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் இப்போது துரித கதியில் நடந்து வருகிறது.

    இந்தப் பணிகள் முடிந்ததும், எஸ்பி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, போலீஸ் நிலையங்களில் என்ன நடக்கிறது? புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள். பணியில் இருப்பவர்கள் யார்? என்பது வரையில் பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    இதனால் பணியில் மெத்தனம் காட்டும் சில போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • மகாளய அமாவாசையொட்டி நடந்தது
    • ஏராளமானோர் குவிந்தனர்

    வேலூர்:

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என அழைக்கப்படுகிறது.

    முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    மகாளய அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர். கொரோனோ தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூட்டம் குறைவாக காணப்பட்டது.

    ஆனால் இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    மகாளய அமாவாசையொட்டி திருஷ்டி பூசணிக்காய் பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • டி.எஸ்.பி. தலைமையில் சென்றனர்
    • அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை

    வேலூர்:

    நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி கொடுத்ததாகவும், வாலிபர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகவும் கூறி என். ஐஏ அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாஜக இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் வீடு, அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவும் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பூபதி ராஜன் தலைமையில் 30 போலீசார் இன்று கோவை விரைந்தனர்.

    கோவை செல்லும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • கிரீன் சர்க்கிள் போக்குவரத்து மாற்றத்தால் நெரிசல் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    சென்னை மார்க்கமாக வரும் வாகனங்கள் சென்னை அருகே சர்வீஸ் சாலையில் இறங்கி கிரின் சர்க்கிளை அடைவதை தடுக்க அந்த பாதை அடைக்கப்பட்டது.

    அனைத்து வாகனங்களும் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தை சுற்றிக்கொண்டு புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும். அதேபோன்று வேலூர்- திருவண்ணாமலை மார்க்கமாக வரும் வாகனங்கள் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே உள்ள ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி சர்வீஸ் சாலையை அடைந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு வருகின்றன.

    திருப்பதி காட்பாடி செல்லும் பஸ் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் இந்த பாதையில் வருகின்றன. ரெயில்வே பாலத்திற்கு செல்லக்கூடிய சர்வீஸ் சாலை இருபுறமும் மிகக் குறுகலாக உள்ளது.

    இந்த சாலை ஓரங்களில் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மெக்கானிக் கடைகளுக்கு சொந்தமான வாகனம் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. சர்வீஸ் சாலையில் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

    இந்த சர்வீஸ் சாலையை 5 மீட்டரில் இருந்து 8.5 மீட்டராக அகலம் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் சாலை அகலப்படு த்தப்படுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

    அதே நேரத்தில் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் சில வாகனங்கள் சென்று வருவது தொடங்கிவிட்டது.

    முத்துமாண்டபம் சாலையில் உள்ள சப்வேயில் வாகனங்கள் சென்று திரும்பக்கூடாது என்பதற்காக அதை தடுப்புகள் வைத்து அடைத்து இருந்தனர்.அதையும் எடுத்துவிட்டு சிலர் இஷ்டத்துக்கு சென்று வருகின்றனர். ராணிப்பேட்டை சென்னை ஆற்காடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் இருந்து கிரீன் சர்க்கிளுக்கு வருவதை தடுக்க சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி விடுகின்றனர்.

    சென்னை சில்க்ஸ் அருகே சாலை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வள்ளலார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கார்கள் சர்வீஸ் சாலைக்கு வருகின்றன.

    இதனால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை ஏற்கனவே குறுகலாக தான் உள்ளது. அதனை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • 744 இடங்களில் நடந்தது
    • 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ேடாருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உயிர் இழப்பை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொது மக்கள் அதிக அளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மார்க்கெட் பகுதி என இன்று 744 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

    இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    • ரூ.1.50 லட்சம் பொருட்கள் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் மஜீத் தெருவை ேசர்ந்தவர்

    நவ்ஷாத் (வயது 40) இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகர பொருளாளராக உள்ளார்.

    நவ்ஷாத் குடியாத்தம் எம்.பி.எஸ்.நகர் விரிவாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

    நேற்று காலையில் கடை திறந்த போது கடையின் மேற்கூறையின் இரும்பு சீட்டுகள் அகற்றப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 150 கிலோ எடை உள்ள காப்பர் கம்பிகளும், சுமார் 70 கிலோ எடையுள்ள பித்தளை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது அதேபோல் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவு கருவிகளும் திருடு போயிருந்தது.

    திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் நவ்ஷாத் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றர்.

    • 5 டன் சிக்கியது
    • டிரைவர் கைது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசாரி வலசை கிராமம் அருகே கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண் காந்தி, ராஜமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பரதராமி நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் சிறுசிறு மூட்டைகளாக 5 டன் ரேசன் அரிசி இருந்ததும் ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரேசன் அரிசியை பறிமுதல் செய்து மினி லாரி டிரைவரை கைது செய்தனர்.

    • வேலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர்
    • கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேயர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 103 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    பாஜகவினருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை வேலூர் ஜெயிலில் இருந்து பாஜகவினர் 103 பேரும் வெளியே வந்தனர். ஜெயில் வாசலில் அவர்களுக்கு திருஷ்டி பூசணிக்காய் தேங்காய் சுற்றி உடைத்து பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

    அங்கிருந்து பாஜகவினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது கோஷங்களை எழுப்பிய படி சென்றனர். இதனால் தொரப்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×