என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கடை.
அ.ம.மு.க. பிரமுகரின் இரும்பு கடையை உடைத்து திருட்டு
- ரூ.1.50 லட்சம் பொருட்கள் அபேஸ்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் மஜீத் தெருவை ேசர்ந்தவர்
நவ்ஷாத் (வயது 40) இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகர பொருளாளராக உள்ளார்.
நவ்ஷாத் குடியாத்தம் எம்.பி.எஸ்.நகர் விரிவாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
நேற்று காலையில் கடை திறந்த போது கடையின் மேற்கூறையின் இரும்பு சீட்டுகள் அகற்றப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 150 கிலோ எடை உள்ள காப்பர் கம்பிகளும், சுமார் 70 கிலோ எடையுள்ள பித்தளை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது அதேபோல் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவு கருவிகளும் திருடு போயிருந்தது.
திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் நவ்ஷாத் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றர்.






