என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் இருந்து 30 போலீசார் கோவை விரைந்தனர்
- டி.எஸ்.பி. தலைமையில் சென்றனர்
- அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை
வேலூர்:
நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி கொடுத்ததாகவும், வாலிபர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்ததாகவும் கூறி என். ஐஏ அதிகாரிகள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாஜக இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் வீடு, அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவும் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பூபதி ராஜன் தலைமையில் 30 போலீசார் இன்று கோவை விரைந்தனர்.
கோவை செல்லும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






