என் மலர்
நீங்கள் தேடியது "கேமரா மூலம் கண்காணிப்பு"
- கூடுதல் கேமராக்கள் பொருத்த உத்தரவு
- அலட்சியங்களை தடுக்க நடவடிக்கை
வேலுார்:
வேலூர் மாவட்டத்தில் வேலுார், காட்பாடி, குடியாத்தம் என 3 சப் டிவிஷன்கள் அமைந் துள்ளது. இங்கு 32-க்கும் அதிகமான போலீஸ் நிலையம் உள்ளன. இது தவிர்த்து, மதுவிலக்கு அமல் பிரிவு, குற்ற ஆவண மாவட்ட காப்பகம், குற்றப் பிரிவு, நில அப கரிப்பு தடுப்பு பிரிவு உட்பட பல துறைகள் இயங்கி வருகிறது.
இவை அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த அலுவலகங்களில் பணம் கொடுக்கல், வாங்கல், கட்டப்பஞ் சாயத்து செய்வது, புகார் கொடுக்க வரும் மக்களை அலட்சியமாக நடத்துவது என பல செயல்கள் சிசி டிவி கேமராக்கள் பார்வை படாத இடங்களில் நடந்து வருகிறது.
இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் ஒரு பலனும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், அவரின் கட் டுப்பாட்டில் அமைந்துள்ள அனைத்து நிலையங்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவை, எஸ்.பி அலுவலகத்தில் இதற்கென அமைக்கப்பட் டுள்ள ஒரு கட்டுப்பாட்டு அறையில் ஒன்றிணைக்க உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் இப்போது துரித கதியில் நடந்து வருகிறது.
இந்தப் பணிகள் முடிந்ததும், எஸ்பி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, போலீஸ் நிலையங்களில் என்ன நடக்கிறது? புகார் கொடுக்க வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள். பணியில் இருப்பவர்கள் யார்? என்பது வரையில் பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இதனால் பணியில் மெத்தனம் காட்டும் சில போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.






