என் மலர்
வேலூர்
- வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
- மாடு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதி மற்றும் நகராட்சியை ஒட்டியபடி கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளான மாடுகள் மற்றும் ஆடுகளை பகல் நேரங்களில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர்.
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்ல முக்கியமான சாலை ஆகும்.
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் வேலைகளில் சாலைகளில் அமர்ந்து கொண்டு போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட பின் மீண்டும் அந்த கால்நடைகளை வீட்டில் அடைத்து வைக்காமல் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் உலாவிட்டால் அந்த கால்நடைகளை நகராட்சி நிர்வாகமே பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
- வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
- மாடு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதி மற்றும் நகராட்சியை ஒட்டியபடி கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளான மாடுகள் மற்றும் ஆடுகளை பகல் நேரங்களில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர்.
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்ல முக்கியமான சாலை ஆகும்.
எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் வேலைகளில் சாலைகளில் அமர்ந்து கொண்டு போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மேலும் அபராதம் விதிக்கப்பட்ட பின் மீண்டும் அந்த கால்நடைகளை வீட்டில் அடைத்து வைக்காமல் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் உலாவிட்டால் அந்த கால்நடைகளை நகராட்சி நிர்வாகமே பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.
- வேலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் நடந்தது
- 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகள், குடியிருப்புகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சென்னை விட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமகிருஷ்ணா, நிர்வாக செயற்பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 864 காலி மனைகள் 38 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 25 வீடுகளுக்கு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடந்தது.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒரு மாத கால அவகாசத்தில் பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் லாங்கு பஜார், மண்டி தெரு இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன
- சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்ற முடிவு
வேலூர்:
வேலூர் மண்டி தெரு மற்றும் லாங்கு பஜாரில் இரண்டு பக்கமும் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே லாங்கு பஜார் மற்றும் மண்டி தெருவில் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றம் செய்வது மற்றும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது என முடிவு செய்தனர்.
- ஒடுகத்தூர் அரசு பள்ளியில் போட்டி நடந்தது
- வெற்றி பெறும் மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலை திருவிழா கொண்டாட்டம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டனர் வெற்றிப்பெற்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் இருந்த பல்வேறு கலைகளை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வரப்படும் எனும் நோக்கத்தில்
ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் துர்காராணி தலைமையில் நேற்று கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது. இதில் பள்ளி மாணவிகள் ஆர்வ முடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், நடனம், நாடகம், ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கடைசியாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தற்போது இந்த கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்ப டுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- பஸ் மரத்தில் மோதி விவசாயி பலியான வழக்கில் நடவடிக்கை
- குடியாத்தம் பஸ் நிலையத்தில் பரபரப்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி ஜங்காலபள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 52) விவசாயி.
கடந்த 2015-ஆம் ஆண்டு மணி அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமம் அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான மணியின் மகன்கள் அசோக்குமார், வேலு, மகள்கள் சத்யா, பவித்திரா ஆகிய 4 பேரும் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரணை செய்த குடியாத்தம் சார்பு நீதிபதி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணியின் வாரிசுதாரர்களுக்கு 11 லட்சத்து 82ஆயிரத்து 342 ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
அரசு போக்குவரத்து நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன் இழப்பீட்டு தொகையை வசூலிக்கும் பொருட்டு குடியாத்தம் அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.
நேற்று காலையில் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளையாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.தேவராஜ், பி.ஆனந்தராஜ், மணியின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் டவுன் பஸ்சை பயணிகளுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி ஜப்தி செய்தனர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழக்கறிஞர் மூலம் சார்பு நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர் விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட சார்பு நீதிபதி ஜி. பிரபாகரன் வரும் 8-ந் தேதிக்குள் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு டவுன் பஸ்சை விடுவித்தார்.
குடியாத்தத்தில் பயணிகளுடன் டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிராம மக்கள் அதிர்ச்சி
- வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.
யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார்ஏரி மற்றும் வலசை பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் 2 படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொகிலி, கோவிந்தன், சுந்தரேசன் இவர்களுக்கு சொந்தமான ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் அவர்களின் வீட்டில் உள்ள பட்டிக்கு வந்து சேரும் சைனகுண்டா கிராமம் ஆந்திர தமிழக எல்லையில் வனப்பகுதி ஒட்டியபடி உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் சிறுத்தைகள் சைனகுண்டா கிராமத்திற்குள் புகுந்து மொகிலி மற்றும் கோவிந்தனின் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வருவதற்குள் சிறுத்தைகள் தப்பி ஓடியுள்ளன. தப்பி ஓடிய சிறுத்தைகள் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருடைய ஆட்டை கடித்து வனப்பகுதியில் இழுத்துச் சென்றுள்ளது சிறுத்தைகள் கடித்த மொகிலி மற்றும் கோவிந்தன் ஆடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன.
மாலை வேலைகளிலே கிராமத்திற்கு நுழைந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவத்தால் சைனகுண்டா கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் சிறுத்தைகள் புகும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்ப டுகின்றனர்.சைனகுண்டா பகுதியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது வனத்துறையின் ஓய்வு விடுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊருக்குள் சிறுத்தைகள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
- வேலூர் போலீஸ் குடியிருப்பு சீரமைப்பு
- இடம் பெயருவதில் சிக்கல் உள்ளதாக புகார்
வேலூர்:
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் பின்புறம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 72 வீடுகள் உள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் இந்த குடியிருப்பு பயன்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் தற்போது கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது.
இதை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
எனவே இங்கு குடியிருப்பவர்களை தற்காலிகமாக காலி செய்ய அங்கு நேற்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் ஒலிபெருக்கி மூலமும் குடியிருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உடனடியாக காலிசெய்வதில் சிரமம் உள்ளது. வேறு வீடுகள் பார்த்து இடம்பெறுவதில் சிக்கல் உள்ளது.
எனவே பிற காவலர் குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் கிராமிய தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிெரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் ஊராட்சி பூங்குளம் மலைப்பகுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சிலர் அடுப்புகள் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் சாராயம் காய்ச்சிய அடுப்புகளை உடைத்து அகற்றினர் மேலும் அங்கு 4 பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர்.
- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
- விரிஞ்சிபுரம் மேம்பால பணி விரைவில் தொடங்கும் என தகவல்
வேலூர்:
வேலூர் அப்துல்லாபுரம் அரசு ஐடிஐ வளாகத்தில் புதிய கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 69 அரசு ஐடிஐ மேம்படுத்தரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதற்கான பணிகள் தற்போது அனைத்து ஐடிஐ களிலும் நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நான் அறிவுறுத்தியுள்ளேன்.
வேலூர் அப்துல்லாபுரம் ஐடிஐ 1964 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 12 தொழிற் பிரிவுகள் உள்ளன.புதிய கட்டிட வசதிகள் மூலம் புதிதாக இரண்டு தொழிற் பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் கிராம சாலைகள் நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.
கரூர் மேம்பால பணிகளில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். இதனை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி பழைய பல்லவியை பாடியுள்ளார்.
கரூர் மேம்பால பணி முடியும் முன்பே அதற்கான தொகை முழுவதும் அளிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது.இதனை பார்த்து நான் இது பற்றி ஒப்பந்ததாரிடம் விசாரித்தேன்.அப்போது நான் பணி செய்து கொண்டிருக்கிறேன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது முன்கூட்டியே பணத்தை முழுமையாக அதிகாரிகள் கொடுத்தால் நான் என்ன செய்வேன் என தெரிவித்தார்.
பணி முடிவடையும் முன்பு பணத்தை வழங்கியதற்காக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது பணிகள் முடிவடைந்து தரமாக முடிக்கப்பட்டுள்ளது.
கரூர் மேம்பால பணி முடிவடையும் முன்பே பணம் வழங்கியது தொடர்பாக தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது அதன் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மத்திய அரசுக்கு திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்கும் நிலையில் உள்ளது. ஜனவரி மாதத்தில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
ஜவ்வாது மலையில் ஊராட்சி சாலைகள் ஒன்றிய சாலைகள் உள்ளன.அமிர்தி முதல் செங்கம் வரையிலும் ஆலங்காயம் முதல் ஜமுனாமரத்தூர் வரையிலும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனை அகலப்படுத்த வனத்துறையுடன் அனுமதி பெற வேண்டி உள்ளது. அதற்குப் பிறகு நிதி ஒதுக்கப்பட்டு அந்த சாலைகள் விரிவுபடுத்தப்படும்.
திருப்பத்தூர் ஆம்பூர் சர்க்கரை ஆலை இயக்க போதுமான அளவு கரும்பு உற்பத்தி இல்லை. தமிழகத்தில் இடிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு ரூ.3000 கோடி வரை தேவைப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு உள்ள சுங்கச்சா வடிகளை குறைப்பது குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளோம். தற்போது சுங்க கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க போ வதாக தெரிவித்துள்ளனர்.
வேலூர் சுற்றுச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதனை விரைவுப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உடன் இருந்தனர்.
- 17 ஆயிரம் பேர் ஆதார் எண்ணை சரிசெய்ய உறுதி செய்யாமல் உள்ளனர்
- 30-ந் தேதிக்குள் புதுப்பித்து அறிவுரை
வேலூர்:
வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் இடுபொருட்களை வாங்கும் வகையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களைச் சரி செய்தால் மட்டுமே, திட்டத்தின் அடுத்த தவனைத்தொகையைப் பெற முடியும். வேலுர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயி களில் 17 ஆயிரம் விவசா யிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர்.
பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. எண் தங்களது செல்போனுக்கு அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி. எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள பொதுசேவை மையங்களுக்கு சென்று ரூ.15 செலுத்தி பி.எம்.கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விவரங்களைப் பதிவு செய்யலாம்.
விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே வருகிற 30-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் பதிவைப் புதுப்பித்து தொடர்ந்து உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெல்லியில் பயன்படுத்துவது போல் செயல்படுத்தபடுகிறது
- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் முக்கிய கழிவுநீர் கால்வாயாக நிக்கல்சன்கால்வாய் கருதப்படுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் வழியாக சென்று இறுதியில் பாலாற்றில் கலக்கிறது. தினமும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.
இந்த நிலையில் இந்த நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.
அதன்படி நேற்று மாங்காய் மண்டி அருகே கமிஷனர் அசோக்குமார் தலைமையில் கழிவுநீரை பயோ ஆர்கானிசம் என்ற தொழில்நுட்பத்தில் மீண்டும் பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்த தொழில் நுட்பம் நம்பக தன்மையை ஏற்படுத்தி உள்ளது. எனவே கால்வாய் நீரை மீண்டும் நன்னீராக மாற்றி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
நிக்கல்சன்கால்வாயில் ஏராளமான கழிவுநீர் வீணாக செல்கிறது. இதை தடுக்கும் வகையில் மீண்டும் இந்த நீரை சுத்திகரித்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் தேவையை தவிர்த்து இந்த நீரை விவசாயத்துக்கும், தாவரத்துக்கும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறை டெல்லி போன்ற நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை தற்போது வேலூர் மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.
வீடுகளில் இருந்து சமையல்அறை, குளியலறை கழிவுநீரில் சில குறிப்பிட்ட வகையான பாக்டீரியா, கிருமிகள் மட்டுமே காணப்படும். எனவே இதனை மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளது. அதன்அடிப்படையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளோம்.
இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனிடையே காலை மற்றும் மழைக்காலங்களில் இந்த கழிவுநீர் கால்வாயில் எத்தனை லிட்டர் கழிவுநீர் வெளியேறும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும். இறுதியில் தொழிற்சாலைகளுக்கு இந்த நீரை விற்பனையும் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






