என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் சுற்றுசாலை"

    • அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
    • விரிஞ்சிபுரம் மேம்பால பணி விரைவில் தொடங்கும் என தகவல்

    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரம் அரசு ஐடிஐ வளாகத்தில் புதிய கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 69 அரசு ஐடிஐ மேம்படுத்தரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    அதற்கான பணிகள் தற்போது அனைத்து ஐடிஐ களிலும் நடந்து வருகிறது. வருகிற ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நான் அறிவுறுத்தியுள்ளேன்.

    வேலூர் அப்துல்லாபுரம் ஐடிஐ 1964 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 12 தொழிற் பிரிவுகள் உள்ளன.புதிய கட்டிட வசதிகள் மூலம் புதிதாக இரண்டு தொழிற் பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் கிராம சாலைகள் நெடுஞ்சாலைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.

    கரூர் மேம்பால பணிகளில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். இதனை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி பழைய பல்லவியை பாடியுள்ளார்.

    கரூர் மேம்பால பணி முடியும் முன்பே அதற்கான தொகை முழுவதும் அளிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது.இதனை பார்த்து நான் இது பற்றி ஒப்பந்ததாரிடம் விசாரித்தேன்.அப்போது நான் பணி செய்து கொண்டிருக்கிறேன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது முன்கூட்டியே பணத்தை முழுமையாக அதிகாரிகள் கொடுத்தால் நான் என்ன செய்வேன் என தெரிவித்தார்.

    பணி முடிவடையும் முன்பு பணத்தை வழங்கியதற்காக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது பணிகள் முடிவடைந்து தரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மேம்பால பணி முடிவடையும் முன்பே பணம் வழங்கியது தொடர்பாக தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது ‌அதன் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விரிஞ்சிபுரம் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மத்திய அரசுக்கு திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்கும் நிலையில் உள்ளது. ஜனவரி மாதத்தில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

    ஜவ்வாது மலையில் ஊராட்சி சாலைகள் ஒன்றிய சாலைகள் உள்ளன.அமிர்தி முதல் செங்கம் வரையிலும் ஆலங்காயம் முதல் ஜமுனாமரத்தூர் வரையிலும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இதனை அகலப்படுத்த வனத்துறையுடன் அனுமதி பெற வேண்டி உள்ளது. அதற்குப் பிறகு நிதி ஒதுக்கப்பட்டு அந்த சாலைகள் விரிவுபடுத்தப்படும்.

    திருப்பத்தூர் ஆம்பூர் சர்க்கரை ஆலை இயக்க போதுமான அளவு கரும்பு உற்பத்தி இல்லை. தமிழகத்தில் இடிக்கப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு ரூ.3000 கோடி வரை தேவைப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்கு உள்ள சுங்கச்சா வடிகளை குறைப்பது குறித்து அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளோம். தற்போது சுங்க கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க போ வதாக தெரிவித்துள்ளனர்.

    வேலூர் சுற்றுச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதனை விரைவுப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உடன் இருந்தனர்.

    ×