என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்
    X

    குடியாத்தத்தில் முக்கிய சாலைகளில் சுற்றுத் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்.

    குடியாத்தத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்

    • வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
    • மாடு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பகுதி மற்றும் நகராட்சியை ஒட்டியபடி கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளான மாடுகள் மற்றும் ஆடுகளை பகல் நேரங்களில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர்.

    குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்ல முக்கியமான சாலை ஆகும்.

    எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் வேலைகளில் சாலைகளில் அமர்ந்து கொண்டு போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது இது குறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    மேலும் அபராதம் விதிக்கப்பட்ட பின் மீண்டும் அந்த கால்நடைகளை வீட்டில் அடைத்து வைக்காமல் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் உலாவிட்டால் அந்த கால்நடைகளை நகராட்சி நிர்வாகமே பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×