என் மலர்
வேலூர்
- பொறுப்புடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பரிசு
- டி.எஸ்.பி. வழங்கினார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிப்பாஷா வயது 30 கார் மெக்கானிக்காக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஆசிப்பாஷாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது குடியாத்தத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று விட்டு இரவு நேரம் ஆகிவிட்டதால் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ராஜா என்பவரின் ஆட்டோவில் மொரசப்பல்லி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது உடன் கொண்டு சென்ற சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் ஏடிஎம் கார்டுகள் மருந்து மாத்திரைகள் இருந்த பையை காணவில்லை.
ஆசிப்பாஷா தவறவிட்ட பையை ஆட்டோ டிரைவர் ராஜா கவனிக்கவில்லை இந்நிலையில் நேற்று காலையில் அந்த பையில் இருந்த போன்களுக்கு ரிங்டோன் வந்துள்ளது. அப்போது ஆட்டோவில் பையும் அதில் செல்போனும் இருந்துள்ளது. வேறு ஒருபோனில் இருந்து பேசிய ஆசிப்பாஷா பையை தவறிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் நகர மன்ற தலைவர் சவுந்தரராசனுக்கு தெரிவித்தார்
இதனை தொடர்ந்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி முன்னிலையில் ஆசிப்பிடம் ஆட்டோ டிரைவர் ராஜா பையை ஒப்படைத்தார். அப்போது டிஎஸ்பி ராமமூர்த்தி ஆட்டோ டிரைவர் ராஜாவை வெகுவாக பாராட்டினர் தொடர்ந்து நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆட்டோ டிரைவரை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.
- வி.ஐ.டி. கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வக்கீல் வி.சி.ராஜ கோபாலாச்சாரியின் நினைவு கருத்தரங்கு நடைபெற்றது. வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. பிஸ்னஸ் பள்ளி முதல்வர் வி.வி.கோபால் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மையே.
இதற்கு சரியான காரணங்கள் கூற முடியாது. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நீதித்துறை கட்டமைப்பை சரி செய்ய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் கோர்ட்டு கட்டிடங்கள், அறைகள், காத்திருப்பு அறைகள், பார்அசோசியேஷன் அரங்கம் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.
சுதந்திரம் அடைந்த பின்னர் நாம் பல நீதிமன்றங்களை உருவாக்கி உள்ளோம். நீதிபதிகள், அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அதில், 40 சதவீதம் மாநில அரசின் பங்கு உள்ளது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் நிதி பற்றாக்குறை என்று சரியாக நீதித்துறைக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. இளம் வக்கீல்கள் ஏழை, ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழக்கில் நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுநாதன் பேசியதாவது:-
வக்கீல் ராஜ கோபாலாச்சாரி எனது குரு ஆவார். சொத்து, சேமிப்பு உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாதவர். அன்றைக்கு சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் குணம் உடையவர். குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல கல்வி கொடுக்க வேண்டும். கோர்ட்டில் ஒரு வழக்கில் தீர்வு காண்பதற்கு நீண்ட காலம் ஆகிறது.
அதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட, உயர்நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்படாமல் உள்ளன. வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார்.
முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வி.சி.ராஜகோபாலாச்சாரியின் உருவப்படத்துக்கு வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன், என்.வி.ரமணா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர் டாக்டர்.சேகர் விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, வக்கீல் விஜயராகலு, மூத்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (45) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மேல்மொணவூர் மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக உமாநாத் மீது மோதியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஓ.பி.சி. அணியின் சார்பிலும் நகர பா.ஜ.க. சார்பிலும் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ஓ.பி.சி. அணியின் நகர தலைவர் ஜி.கந்தன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணியின் நகர பொதுச் செயலாளர் ஜி.முருகன், ஓ.பி.சி. அணியின் நகர பொருளாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
- புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.
ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
இருப்பினும் ஜெய்சங்கருக்கு புனிதா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் ஷூ கம்பெனிக்கு செல்ல பஸ்சிலிருந்து இறங்கி அழிஞ்சிக்குப்பம் மெயின் ரோட்டில் புனிதா நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் வந்த ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புனிதா மயங்கி விழுந்தார்.
இதில் உயிருக்கு போராடிய புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்சங்கர் அவரது மனைவியை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆள் மாறாட்டத்தில் வியாபாரிக்கு கத்திகுத்து
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி ஏரியூரைச் சேர்ந்த சந்துரு, பாஸ்கர், மற்றும் புது வசூரை சேர்ந்த அசோகன் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர் பெருமுகை டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மது குடித்தனர்.
மது குடித்தும் தகராறு
அப்போது அவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த இரு தரப்பினர் சரமாரியாக தாக்கினர். மேலும் அவர்கள் மது பாட்டில்களை தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மது வாங்க வந்தவர்களும் அங்கிருந்து மது குடித்தவர்களும் நாலாபுறம் சிதறி ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே சந்துரு பாஸ்கர் அசோகன் சக்திவேல் ஆகியோர் இரவு 11 மணிக்கு மீண்டும் பெருமுகை பகுதிக்கு வெட்டு கத்தியுடன் சென்றனர்.
பெருமுகை வ.உ.சி. நகரை சேர்ந்த வியாபாரி யுவராஜ் (வயது 41) அங்குள்ள தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அவரை தங்களுடன் மோதிய கும்பல் என நினைத்த சந்துரு தரப்பினர் யுவராஜை தாக்கினர்.மேலும் கத்தியால் அவரை வெட்டினர். சத்துவாச்சாரி போலீசார் கத்தி வெட்டில் படுகாயமடைந்த யுவராஜை மீட்டு பூட்டுத் தாக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன்
- விரட்டி விரட்டி பிடித்து சென்றனர்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் பாதசாரிகளையும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலுக்கு ஏராளமா னவர்கள் வந்திருந்தனர். மேலும் அங்கு பஸ் நிறுத்ததிலும் பொதுமக்கள் பலர் நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வெள்ளை நிற தெருநாய் ஒன்று திடீரென அங்கிருந்த பொதுமக்களை கடிக்க தொடங்கியது. ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் துரத்திச் சென்று அந்த நாய் கடித்தது. இதைப்பார்த்ததும் பயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். சிலர் நாயை அங்கிருந்து விரட்ட முயன்றனர். எனினும் நாய் அவர்களை விடாமல் கடித்தது. நடந்து சென்றவர்கள் மட்டுமில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களையும் பதம் பார்த்தது. பொதுமக்கள் திரண்டு விரட்டியதும் அந்த நாய் அங்கிருந்து சர்வீஸ் சாலை வழியாக ஓடியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சுமார் 30 பேரை கடித்தது.
பொதுமக்களை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சத்துவாச்சாரி பகுதியில் இன்று மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கும் பணி நடந்தது.
சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் வளாகம் பெரிய தெரு பள்ளிக்கூட தெரு கானார் தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலைகள் மற்றும் சுருக்கு கம்பிகளைக் கொண்டு பிடித்தனர்.
அப்போது தெரு நாய்கள் அவர்களை கண்டு ஓட்டம் பிடித்தன. நாய்களை விரட்டி விரட்டி பிடித்தனர்.கலெக்டர்அலுவலக வளாகம் மற்றும் அதன் அருகில் நின்றநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். இன்று காலை வரை சுமார் 20 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.
பிடிபடும் தெரு நாய்கள் வேலூர் கோட்டை அருகே உள்ள கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முதியவர் காதை கடித்ததால் பரபரப்பு
- ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர்:
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உமாராவ் சிங் (வயது 62). வேலூருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்றார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த பகிரத் (55) என்பவரும் தங்க கோவிலுக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து வேலூர் பழைய பஸ் நிலையம் வருவதற்காக இருவரும் ஸ்ரீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் செல்லும் பஸ்சில் ஏறினர்.
சீட் புடிக்க தகராறு
அப்போது பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இந்தி மொழியில் மாறி மாறி பேசிக் கொண்டதால் சக பயணிகளுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
முதியவர் காதை கடித்தார்
திடீரென ஆத்திரம டைந்த பகிரத் உமாராவ்சிங்கை தாக்கினார். அவரது காதை பலமாக கடித்தார். காதில் இருந்து ரத்தம் பீறிட்டது.இதனால் உமாராவ்சிங் வலியால் அலறி துடித்தார். காது ஒருபுறம் அறுந்து தொங்கியது. அதுவரை பகிராத் விடாமல் கடித்தார். பயணிகள் அவர்களை விலக்கி விட்டனர்.
படுகாயம் அடைந்த உமாராவ் சிங் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இது குறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் வட மாநிலத்த வர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கு தேர்வு
- மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
குடியாத்தம்:
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் குடியாத்தம் ஒன்மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மூலமாக 14 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் 3- தங்கபதக்கமும், 4- வெள்ளி பதக்கமும், 7 -வெண்கல பதக்கமும் வென்று சாதனைப் படைத்தனர்.
தங்கம், வெள்ளிபதக்கம் வென்றவர்கள் விழுப்புரத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்குப்பெற தேர்வாகியுள்ளனர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் ஆர். மோகன்குமாரையும், போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களையும் செதுக்கரை ஏபிஜேஅப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பாடு
குடியாத்தம்:
குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.
ஒற்றை யானை
அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்த சில நாட்களுக்கு முன்பு 20 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப் பகுதியை நோக்கி சில நாட்களுக்கு முன் விரட்டியுள்ளனர்.
யானை கூட்டம் கடந்த 15 நாட்களாக சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி குடிமிப்பட்டி, பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வி.டி.பாளையம் பகுதியில் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மோர்தானா காட்டுப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வருகிறது இந்த யானை கடந்த சில நாட்களாக சைனகுண்டாவிலிருந்து மோர்தானா செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் மாலை நேரங்களில் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை விரட்டி வருகிறது.நேற்று முன்தினம் மாலையும் மோர்தானா செல்லும் சாலையில் மூங்கில் புதார் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக பள்ளி மற்றும் வேலை முடித்துவிட்டு சொந்த மோர்தானா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்களை விரட்டி உள்ளது. யானை பொதுமக்களை விரட்டும் தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
நிலையில் நேற்று மோர்தானா சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்த வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து கதிர்ஆனந்த் எம்பி வனச்சரக அலுவலர் வினோபாவிடம் ஒற்றை யானை மற்றும் யானை கூட்டத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ந்து அச்சுறுத்தும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- கதிர்ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 2000 ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது அப்போது குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா வரை சுமார் 8கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டது.
மோர்தானா சாலை
மோர்தானா சாலை பல இடங்களில் பழுதாகி இருந்ததனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் மோர்தானா சாலையை சீரமைக்க வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மோர்தானா சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பூமி பூைஜ
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கள்ளூர்ரவி, மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கவுரப்பன், மனோகரன், ரஞ்சித்குமார், அமுதாலிங்கம், தீபிகா பரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பாளராக வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், திருமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சீதாராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.தயாள மூர்த்தி, எம்.சத்தியமூர்த்தி வனச்சரக அலுவலர் வினோபா உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
- இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
வாலிபர் மற்றும் இளம்பெண் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
இளம்பெண் பச்சை நிற பேண்ட் ரோஸ் கலர் டாப் சுடிதார் அணிந்திருந்தார். வாலிபர் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டை அணிந்திருந்தார்.
இரு உடல்களும் ரெயில் மோதி சிதறி கிடந்தது. உடல் பாகங்கள் முழுவதும் ரத்தமாக காட்சி அளித்தது.
அவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த பகுதியில் இளம்பெண், வாலிபர் யாராவது மாயமாகி உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்தார்களா? அல்லது அடித்து கொலை செய்து வீசப்பட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






