என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிக்பாக்சிங் போட்டியில் குடியாத்தம் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை
    X

    கிக்பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த குடியாத்தம் வீரர்கள்.

    கிக்பாக்சிங் போட்டியில் குடியாத்தம் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை

    • முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கு தேர்வு
    • மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

    குடியாத்தம்:

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் குடியாத்தம் ஒன்மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மூலமாக 14 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் 3- தங்கபதக்கமும், 4- வெள்ளி பதக்கமும், 7 -வெண்கல பதக்கமும் வென்று சாதனைப் படைத்தனர்.

    தங்கம், வெள்ளிபதக்கம் வென்றவர்கள் விழுப்புரத்தில் நடைபெற உள்ள முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்குப்பெற தேர்வாகியுள்ளனர்.

    இவர்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் ஆர். மோகன்குமாரையும், போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களையும் செதுக்கரை ஏபிஜேஅப்துல் கலாம் உடற்பயிற்சி அரங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×