என் மலர்
நீங்கள் தேடியது "டிரைவருக்கு பரிசு"
- பொறுப்புடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பரிசு
- டி.எஸ்.பி. வழங்கினார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மொரசப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிப்பாஷா வயது 30 கார் மெக்கானிக்காக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு ஆசிப்பாஷாவின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது குடியாத்தத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று விட்டு இரவு நேரம் ஆகிவிட்டதால் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ராஜா என்பவரின் ஆட்டோவில் மொரசப்பல்லி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது உடன் கொண்டு சென்ற சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு விலை உயர்ந்த செல்போன்கள் ஏடிஎம் கார்டுகள் மருந்து மாத்திரைகள் இருந்த பையை காணவில்லை.
ஆசிப்பாஷா தவறவிட்ட பையை ஆட்டோ டிரைவர் ராஜா கவனிக்கவில்லை இந்நிலையில் நேற்று காலையில் அந்த பையில் இருந்த போன்களுக்கு ரிங்டோன் வந்துள்ளது. அப்போது ஆட்டோவில் பையும் அதில் செல்போனும் இருந்துள்ளது. வேறு ஒருபோனில் இருந்து பேசிய ஆசிப்பாஷா பையை தவறிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் நகர மன்ற தலைவர் சவுந்தரராசனுக்கு தெரிவித்தார்
இதனை தொடர்ந்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி முன்னிலையில் ஆசிப்பிடம் ஆட்டோ டிரைவர் ராஜா பையை ஒப்படைத்தார். அப்போது டிஎஸ்பி ராமமூர்த்தி ஆட்டோ டிரைவர் ராஜாவை வெகுவாக பாராட்டினர் தொடர்ந்து நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆட்டோ டிரைவரை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.






