என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சாலையில் நின்று கொண்டு கிராம மக்களை விரட்டும் ஒற்றை யானை
- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பாடு
குடியாத்தம்:
குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லைப் பகுதியை ஒட்டியபடி உள்ளது.ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.
ஒற்றை யானை
அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.
வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவுக்கு விரட்டிவிட்டனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்த சில நாட்களுக்கு முன்பு 20 யானைகள் கொண்ட கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதியிலிருந்து ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப் பகுதியை நோக்கி சில நாட்களுக்கு முன் விரட்டியுள்ளனர்.
யானை கூட்டம் கடந்த 15 நாட்களாக சைனகுண்டா, மோர்தானா, தனகொண்டபல்லி குடிமிப்பட்டி, பரதராமி அடுத்த டி.பி.பாளையம், வி.டி.பாளையம் பகுதியில் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மோர்தானா காட்டுப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று சுற்றி வருகிறது இந்த யானை கடந்த சில நாட்களாக சைனகுண்டாவிலிருந்து மோர்தானா செல்லும் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் மாலை நேரங்களில் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை விரட்டி வருகிறது.நேற்று முன்தினம் மாலையும் மோர்தானா செல்லும் சாலையில் மூங்கில் புதார் என்ற பகுதியில் சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக பள்ளி மற்றும் வேலை முடித்துவிட்டு சொந்த மோர்தானா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சென்ற கிராம மக்களை விரட்டி உள்ளது. யானை பொதுமக்களை விரட்டும் தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
நிலையில் நேற்று மோர்தானா சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்த வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோரிடம் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தெரிவித்தனர். இதனையடுத்து கதிர்ஆனந்த் எம்பி வனச்சரக அலுவலர் வினோபாவிடம் ஒற்றை யானை மற்றும் யானை கூட்டத்தை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ந்து அச்சுறுத்தும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்