என் மலர்
நீங்கள் தேடியது "வட மாநிலத்தவர்கள் மோதல்"
- முதியவர் காதை கடித்ததால் பரபரப்பு
- ஆஸ்பத்திரியில் அனுமதி
வேலூர்:
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் உமாராவ் சிங் (வயது 62). வேலூருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்றார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த பகிரத் (55) என்பவரும் தங்க கோவிலுக்கு வந்திருந்தார்.
அங்கிருந்து வேலூர் பழைய பஸ் நிலையம் வருவதற்காக இருவரும் ஸ்ரீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து வேலூர் செல்லும் பஸ்சில் ஏறினர்.
சீட் புடிக்க தகராறு
அப்போது பஸ்சில் சீட் பிடிப்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் இந்தி மொழியில் மாறி மாறி பேசிக் கொண்டதால் சக பயணிகளுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
முதியவர் காதை கடித்தார்
திடீரென ஆத்திரம டைந்த பகிரத் உமாராவ்சிங்கை தாக்கினார். அவரது காதை பலமாக கடித்தார். காதில் இருந்து ரத்தம் பீறிட்டது.இதனால் உமாராவ்சிங் வலியால் அலறி துடித்தார். காது ஒருபுறம் அறுந்து தொங்கியது. அதுவரை பகிராத் விடாமல் கடித்தார். பயணிகள் அவர்களை விலக்கி விட்டனர்.
படுகாயம் அடைந்த உமாராவ் சிங் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இது குறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் வட மாநிலத்த வர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






