search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Killed in a car crash"

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (45) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மேல்மொணவூர் மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக உமாநாத் மீது மோதியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம் பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(48). கட்டிட தொழிலாளி.

    இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையி லிருந்து சேலம் நோக்கி சென்ற கார் மூர்த்தி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடியை அடுத்த ராம நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் ( வயது 34 ) . ஆவாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ( 24 ) .

    இவர்கள் இருவரும் நாட்டறம் பள்ளியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனியில் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர் . பின்னர் மாலை 5 மணிக்கு நாட்டறம்பள்ளியில் இருந்து ராமநாயக்கன்பேட்டைக்கு பைக்கில் சென்றுள்ளனர்.

    புத்துக்கோவில் அருகே சென்றுகொண்டி ருந்தபோது பின்னால் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப் பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஜெயக்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.

    மோகன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×