என் மலர்
வேலூர்
- அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இளம் வாக்காளர்களிடம் படிவங்களை பூர்த்தி செய்து பெற்றனர்
- ஒரு சிலர் பள்ளிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
வேலூர்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைக்கான சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் இன்று நடந்தது.
ஏற்கனவே அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் அரசு அலுவலர்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்களிடம் படிவம் பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.
ஒரு சிலர் வாக்கு சாவடி மையங்களுக்கு செல்ல சிரமப்பட்டு கொண்டு பதிவு செய்யாமல் இருந்தனர். எனவே வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்களை சேகரிக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இளம் வாக்காளர்களிடம் படிவங்களை பூர்த்தி செய்து பெற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் இன்று நடைபெறும் என அறிவித்து இருந்ததால் ஒரு சிலர் பள்ளிக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
- 37,500 லிட்டர் கருப்பு ஆயில் பறிமுதல்
வேலுார்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் சென்ன சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில், என்ஜின்க ளுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை திருடி பதுக்கி வைத்து, கள்ள மார்க்கெட்டில் விற்கப்படு வதாக வேலுார் மண்டல உணவுப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி நந்தகு மாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வனிதா, சப் -இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 3 டேங்கர் லாரிகளில் இருந்து கருப்பு ஆயில் இறக்கப்பட்டு, குடோனுக்கு எடுத்துச்செல்வது தெரிய வந்தது. சந்தேகத்தின்பேரில், அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதில், அவர்கள் 3 பேரும் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் விஜயகுமார் (36) மற்றும் சேலம் மாவட்டம் கெங்கப்பள்ளி ராஜலிங்கம் (42) என்பது தெரியவந்தது.
மேலும், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரியில் டிரைவராக வேலை செய்துவந்த விஜயகுமார் மற்றும் கிளீனர் ராஜ லிங்கம் ஆகியோர், சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் தனியார் கம்பெனிகளுக்கு ஆயில் கொண்டுசெல்லும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த சென்னசமுத்திரத்தில் உள்ள சுடலைமணிக்கு சொந்தமான குடோ னில், தனியார் கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆயிலில் இருந்து அவ்வப்போது 100, 200 லிட்டர் வீதம் திருடி பதுக்கி வைத்து, கள்ளத்தனமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் 3 பேரையும் கைதுசெய்து, வேலூர் ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றப்பட்டிருந்த 37 ஆயிரத்து 500 லிட்டர் கருப்பு ஆயிலையும் பறிமுதல் செய்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்படை க்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஏராளமானோர் தரிசனம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி கோவிந்தாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜியன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நிலவள வங்கி தலைவர் பி.எச்.இமகிரிபாபு, ராஜா குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மமதா, கூடநகரம் ஒன்றியகுழு உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டினர், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
- அஞ்சலி செலுத்தினர்
- ஏராளானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாளை ஒட்டி நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தலைமையில் அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.பாஸ்கர், முன்னாள் துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், நகர நிர்வாகிகள் ஆர்.கே.அன்பு வி.என்.தனஞ்செயன், எஸ்.என்.சுந்தரேசன், எஸ்.ஐ.அன்வர்பாஷா உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பணி சுமையை குறைக்க நடவடிக்கை
- ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உடப்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் கிராமத்தில் குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலான்மை மையத்திற்கு எடுத்து சென்று குப்பைகளை தரம் பிரித்து அதிலிருந்து உரமாக மாற்றி வருகின்றன.
மேலும் நேற்றுவரை கைகளால் தள்ளு வண்டியினை பயன்படுத்தி குப்பைகளை எடுத்து வந்தனர்.
இன்று முதல் பணி சுமையை குறக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டார். இதையடுத்து தூய்மை பணியாளர்களின் பணியை எளிதாக்கும் வகையில் குப்பைகளை சேகரிக்கும் புதிய வாகனம் வழங்கப்பட்டது.
இதனை ஊராட்சி மன்ற தலைவர் பெற்று துப்புரவு பணியாளர்களிடம் வழங்கினார். இதனால் குப்பைகளை அதிக அளவில் எடுத்து செல்லவும், சிறமம் இல்லாமல் குறைந்த நேரத்தி எடுத்து செல்லவும், பணிசுமையை எளிதாக்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு துப்புரவு பணியாளர்கள் நன்றி தொிவித்தனர்.
- ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நகர, ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர்அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ஏ.அன்பரசு ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திமுக மாநில கொள்கைபரப்பு துணைசெயலாளர் குடியாத்தம் குமரன், மாவட்டதுணை செயலாளர் வக்கீல் பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன்.
குடியாத்தம் நகர திமுக சார்பில் நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மனோஜ், ஜம்புலிங்கம், வசந்தா, முன்னா, பாரி, கோடீஸ்வரன், தண்டபாணி குடியாத்தம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் நிர்வாகிகள் முரளிதரன், சிட்டிபத்மநாபன், கல்பனா, லிங்கம், பாபு, சதாசிவம், சந்திரன்.
குடியாத்தம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் சேகர், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சாவித்திரிமணி, பத்ரிநாத், அண்ணாதுரை, ரமேஷ், ஆனந்தன்.
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பழனி, மோகன், நத்தம்அமர், ரமேஷ் குடியாத்தம் தெற்கு ஒன்றியம் நிர்வாகிகள் தரணிசுந்தர், மகேந்திரன், தமிழ்ச்செல்வி, நவீன் விஜயகுமார் உள்பட கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வாலாஜா சுங்க சாவடி நில எடுப்பு விவகாரம் ெதாடர்பான விசாரணை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சங்குசாவடி விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.
இதற்காக சென்ன சமுத்திரம் பகுதியில் சுமார் 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலத்தின் உரிமையாளர்கள் சுமார் 60 பேர் தங்களுக்கு நிலத்தின் இழப்பீடு தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால் நிலத்திற்கு குறைந்த இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலத்திற்கு அரசு வழங்கும் இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே 2019-ம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அப்போது அவர்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் உங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதிக் கொடுங்கள்.
அதை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினர்.
இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில்:- மற்ற இடங்களில் சுங்கச்சாவடிக்கு நிலம் கையகப்ப டுத்தப்படும்போது உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் வாலாஜா சுங்க சாவடிக்கு மட்டும் குறைந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.
எனவே உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- புகார்கள் இருந்தால் நேரடியாக என்னை சந்தித்து தெரிவிக்கலாம்
- மாநகராட்சி ஊழியர்கள் நேர்மையுடன் பணியாற்ற அறிவுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் இடமாற்றம் செய்யப்ப ட்டார். அவருக்கு பதில் சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
நாம் மக்களுடன் நேரடி தொடர்பில் பணியாற்றி வருகிறோம். நாம் அனைவரும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். புகார்கள் ஏதும் வரக்கூடாது.புகார்கள் வராமல் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும்.மக்களை நாம் சந்திக்கும்போது பொறுமை யுடன் மக்களிடம் பேச வேண்டும். சிறப்புடன் பணியாற்றுங்கள். தங்களது தனிப்பட்ட குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் நேரடியாக என்னை சந்தித்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ, மாணவிகள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டபோது சிக்கியது
- கிராம மக்கள் தூய்மைப்படுத்தி, மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப்பல்லி பஞ். ரங்கம்பேட்டையில் உள்ள மலையடிவார பகுதியில், புடைப்பு சிற்பங்கள் மண்ணில் புதைந்து காணப் பட்டன.
இதுகுறித்து, கிராம மக்கள் மற்றும் குடியாத்தம் அரசினர் திரு மகள் ஆலை கல்லூரியில் படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் விஜயரங்கத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது தலைமையில் துறை பேரா சிரியர் ஜெயவேல் மற்றும் மாணவ-மாணவிகள் 25 பேர், ரங்கம்பேட்டை கிராம மலையடிவார பகுதிக்குச் சென்று 2 நாட்களாக கள ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முட் புதரில் மண்டிக்கிடந்த 3 நினைவுக்கற்களை கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம், பேராசிரியர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குறுநில மன்னன் போருக் குச் செல்வதை சித்தரிக்கும் வகையில், கனைக்கும் குதிரை மீது வாள் ஏந்தி போருக்கு செல்லும் குறு நில மன்னனை, வெண் கொற்ற குடைபிடித்து, வெண் சாமரம் வீசி அவனது மனைவிகள் வாழ்த்தி அனுப்புவதுபோல் இந்த புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.
மன்னர்கள் காலத்தில், பொதுவாக பட்டத்து இள வரசன் மற்றும் படை தளபதிகள்தான் போரை வழிநடத்தி செல்வர்.
ஆனால் இங்கு காணப் படும் சிற்பத்தில் மன்னனே போரை வழிநடத்தி செல் வதாக சித்தரிக்கப்பட்டு ள்ளது. மேலும், குதிரையின் அருகில் நாயின்புடைப்பு சிற்பம் மிக நேர்த்தி யாக வடிவமைக்கப்பட்டு ள்ளது.
மற்றொரு புடைப்பு சிற்பத்தில், அரசகுல பெண்கள் 2 பேரின் நினைவுக் கல்லில். ஒரு பெண், கிளியை தன் கையில் ஏந்தியவாறு இருப்பதும், குறுநில மன்னன் இறந்த பிறகு அவருடைய மகனான பட்டத்து இளவரசன் போரை வழிநடத்திச் செல் கிறான், அவனது மனை விகள் வெண்கொற்ற குடைகளுடன் வெண் சாமரம் வீசி வாழ்த்தி வழி வாழ்த்தியனுப்பி வைப்பது போல் உள்ளது. மேலும், அதன் அருகில் பழங்காலத்திலான அக்னி குண்டம் ஒன்று காணப்படுகிறது.
இதை பார்க்கும்போது, போரில் வீரமரணம் அடைந்த மன்னன், இளவரசன், படை மனைவிகள் ஆகியோரின் தங்கள் உயிரை அக்னிகுண்டத்தில் மாய்த்து இறந்ததாக கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.
வடநாட்டில் சத்ரியர் மரபில் வந்த வீரர்கள் போரில் மரணமடைந்தால், அவர்களது மனைவி தீயில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்வது வரலாற்று தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இந்த புடைப்பு சிற்பங்களை, கிராம மக்கள் தூய்மைப் படுத்தி, மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டனர்.
- ஆசிரியர் கூட்டமைப்பு அறிக்கை
- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்த வலியுறுத்தல்
வேலூர்:
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாது:-
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 2023-24 நிதியாண்டிலும் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் சிறிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளாக மாற்றப்படாத வருமான வரி உச்சவரம்பு, வரும் நிதியாண்டில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தாண்டும் பழைய வரிமுறையில் எந்த மாற்றமும் செய்யாமல் புதிய வரிமுறை உச்சவரம்பில் சில மாற்றங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் சேமிக்கும் பழக்கம் நடுத்தர வர்கத்தினரிடையே முற்றிலும் போக்கிடும் வகையில் அமைந்துள்ளது. சேமித்தால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
கடந்த ஆண்டு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நிதியமைச்சகத்திற்கு நாங்கள் சமர்பித்த கோரிக்கை மனுவில் தனிநபர் வருமான வரி வரம்பு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும், வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும் என நிதியமைச்சத்திற்கு சமர்பித்தோம்.
மேலும் 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த கோரினோம்
ஆனால் புதிய வரி விதிப்பில் புதிதாக இணைபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை. புதிய வரி விதிப்பில் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த அரசு முன்மொழிந்துள்ளது.
நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு குறித்து புதிய அறிவிப்பு கடந்த பல ஆண்டுகளாக மாற்றம் அறிவிக்காமல் இருந்து தற்போது சிறிய மாற்றம் மட்டுமே அளித்திருப்பது மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே ரூபாய்.5இலட்சம் முதல் 7.5இலட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 5% வரியும் 7.5முதல் 10இலட்சம் ரூபாய் வரை 10% வரியும் ரூபாய் 12.5 இலட்சத்திற்கு மேல் 15 இலட்சம் வரை 20% சதவிகித வரியும் 15 இலட்சத்திற்கும் அதிகாமான வருமா னத்திற்கு 30 சதவிகிதம் வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க கோருகின்றோம்.
வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.
80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்திய மொத்த வருவாயில் ஜி.டி.பி. 6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆற்றின் கரையில் 2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
- பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியாத்தம் நகரில் மையப் பகுதியில் உள்ள காமராஜர் பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் பல நாட்கள் தொடர்ந்து பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் மற்றும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றின் கரையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜகணபதி நகர் வழியாக மேல்ஆலத்தூர் ரோடு செல்லும் வழியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே நடுவில் செல்லும் கவுண்டன்யா ஆற்றில் தற்போது செயல்படுத்தப்பட உள்ள வெள்ளதடுப்பு கரை மீது அங்கிருந்து நெல்லூர்பேட்டை சேம்பள்ளி கூட்ரோடு வரை வெள்ள தடுப்பு கரை மீது இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகளையும் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பி.கோபி, குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்யாபொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் பி.யோகராஜ், ராஜேஷ் அரசு வழக்கறிஞர் வக்கீல் எஸ்.பாண்டியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பக்க கரைகளில் தலா இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
தற்போது புதியதாக ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல் வெள்ள தடுப்பு சுவர் மீது ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவே கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் தொடங்கி சேம்பள்ளி கூட்ரோடு வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு அதன் மீது சாலை அமைக்கவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு இதன் விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக இப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- ரெயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் வந்தடைந்தது.
- அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே பதற்றம் ஏற்பட்டது.
வேலூர்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ரெயிலில் சென்னை திரும்பினார். அதற்காக நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தார்.
ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் பெட்டியில் பயணம் செய்தார்.
ரெயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் அருகே சென்றபோது வடமாநில பெண் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் ரெயில் நின்றது. போலீசார் வந்து பெண் பயணியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தெரியாமல் கைப்பட்டதாக கூறினார்.
வடமாநில பெண்ணை போலீசார் எச்சரித்தனர். இதை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்து தொடர் பயணத்துக்கு அனுமதித்தனர். ரெயில் நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் வந்தடைந்தது.
இதனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே பதற்றம் ஏற்பட்டது.






