search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "16th century sculptures found"

    • மாணவ, மாணவிகள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டபோது சிக்கியது
    • கிராம மக்கள் தூய்மைப்படுத்தி, மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டனர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப்பல்லி பஞ். ரங்கம்பேட்டையில் உள்ள மலையடிவார பகுதியில், புடைப்பு சிற்பங்கள் மண்ணில் புதைந்து காணப் பட்டன.

    இதுகுறித்து, கிராம மக்கள் மற்றும் குடியாத்தம் அரசினர் திரு மகள் ஆலை கல்லூரியில் படிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் விஜயரங்கத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, அவரது தலைமையில் துறை பேரா சிரியர் ஜெயவேல் மற்றும் மாணவ-மாணவிகள் 25 பேர், ரங்கம்பேட்டை கிராம மலையடிவார பகுதிக்குச் சென்று 2 நாட்களாக கள ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முட் புதரில் மண்டிக்கிடந்த 3 நினைவுக்கற்களை கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் இதுகுறித்து வரலாற்று துறை தலைவர் விஜயரங்கம், பேராசிரியர் ஜெயவேல் ஆகியோர் கூறியதாவது:-

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குறுநில மன்னன் போருக் குச் செல்வதை சித்தரிக்கும் வகையில், கனைக்கும் குதிரை மீது வாள் ஏந்தி போருக்கு செல்லும் குறு நில மன்னனை, வெண் கொற்ற குடைபிடித்து, வெண் சாமரம் வீசி அவனது மனைவிகள் வாழ்த்தி அனுப்புவதுபோல் இந்த புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.

    மன்னர்கள் காலத்தில், பொதுவாக பட்டத்து இள வரசன் மற்றும் படை தளபதிகள்தான் போரை வழிநடத்தி செல்வர்.

    ஆனால் இங்கு காணப் படும் சிற்பத்தில் மன்னனே போரை வழிநடத்தி செல் வதாக சித்தரிக்கப்பட்டு ள்ளது. மேலும், குதிரையின் அருகில் நாயின்புடைப்பு சிற்பம் மிக நேர்த்தி யாக வடிவமைக்கப்பட்டு ள்ளது.

    மற்றொரு புடைப்பு சிற்பத்தில், அரசகுல பெண்கள் 2 பேரின் நினைவுக் கல்லில். ஒரு பெண், கிளியை தன் கையில் ஏந்தியவாறு இருப்பதும், குறுநில மன்னன் இறந்த பிறகு அவருடைய மகனான பட்டத்து இளவரசன் போரை வழிநடத்திச் செல் கிறான், அவனது மனை விகள் வெண்கொற்ற குடைகளுடன் வெண் சாமரம் வீசி வாழ்த்தி வழி வாழ்த்தியனுப்பி வைப்பது போல் உள்ளது. மேலும், அதன் அருகில் பழங்காலத்திலான அக்னி குண்டம் ஒன்று காணப்படுகிறது.

    இதை பார்க்கும்போது, போரில் வீரமரணம் அடைந்த மன்னன், இளவரசன், படை மனைவிகள் ஆகியோரின் தங்கள் உயிரை அக்னிகுண்டத்தில் மாய்த்து இறந்ததாக கிராம மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

    வடநாட்டில் சத்ரியர் மரபில் வந்த வீரர்கள் போரில் மரணமடைந்தால், அவர்களது மனைவி தீயில் இறங்கி உயிரை மாய்த்துக்கொள்வது வரலாற்று தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இந்த புடைப்பு சிற்பங்களை, கிராம மக்கள் தூய்மைப் படுத்தி, மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டனர்.

    ×