என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabhishekam at Selva Vinayagar temple"
- ஏராளமானோர் தரிசனம்
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி கோவிந்தாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் அமலுவிஜியன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நிலவள வங்கி தலைவர் பி.எச்.இமகிரிபாபு, ராஜா குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் மமதா, கூடநகரம் ஒன்றியகுழு உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டினர், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.






