என் மலர்
நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்"
- அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இளம் வாக்காளர்களிடம் படிவங்களை பூர்த்தி செய்து பெற்றனர்
- ஒரு சிலர் பள்ளிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
வேலூர்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைக்கான சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று 18 வயது பூர்த்தியானவர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கல், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் இன்று நடந்தது.
ஏற்கனவே அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் அரசு அலுவலர்கள் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்களிடம் படிவம் பூர்த்தி செய்து பெற்று வந்தனர்.
ஒரு சிலர் வாக்கு சாவடி மையங்களுக்கு செல்ல சிரமப்பட்டு கொண்டு பதிவு செய்யாமல் இருந்தனர். எனவே வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்களை சேகரிக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இளம் வாக்காளர்களிடம் படிவங்களை பூர்த்தி செய்து பெற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் இன்று நடைபெறும் என அறிவித்து இருந்ததால் ஒரு சிலர் பள்ளிக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.






