என் மலர்
வேலூர்
- சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- விபத்துகள் ஏற்படும் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்படம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளை குறைக்க விஐடி வல்லுநர் குழுவினருடன் இணைந்து போலீஸ் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை ஐ.ஐ.டி. குழுவினருடன் விபத்துகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்துகள் குறித்து ஆய்வு செய்ததில் அதிகப்படியான விபத்துகள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றதும் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுவதும் தெரியவந்துள்ளது.
39.19 சதவீதம் தேசிய நெடுஞ்சாலையிலும் 37.64 சதவீதம் மாநில நெஞ்சாலைகளில், 23.15 சதவீதம் இதர சாலைகளில் முறையே அதிக விபத்துகள் ஏற்படுகிறது.
அதிலும் நடந்து செல்பவர்கள் விபத்துகளில் அதிகம் இறக்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அதிக விபத்துகளை ஏற்படுத்துவதும் விபத்தில் சிக்கும் வாகனங்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில் நேஷ்னல் ரவுன்டானா, ஜி.எஸ் மஹால் அருகில், குடியாத்தம் நகரில் புதிய பஸ் நிலையம் அருகில், வேலூர் தெற்கில் டான் போஸ்கோ பள்ளி, ஊரீசு பள்ளி அருகில், பாகாயத்தில் தொரப்பாடி பெட்ரோல் பங்க் அருகில், காட்பாடியில் விஐடி ரோடு, கே.வி.குப்பத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அதிக விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளன.
இதையடுத்து, விபத்துகள் ஏற்படும் இடங்களில் வாகன தணிக்கையை அதிகரிக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். விபத்து ஏற்படும் இடங்களில் அதிக வேகத்தில் வாகனங்கள் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? இல்லை 3 பேர் பயணம், எதிர் திசையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறதா? போன்ற காரணங்களுக்கு ஏற்ப சாலை போக்குவரத்து விதி மீறல் புகாரில் அபராதங்களை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறும்போது, ''வேலூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் 53 முக்கிய இடங்களில் பிளிங்கர்கள் (இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள்), எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட உள்ளன. அதேபோல், புதிதாக 300 பேரிகார்டுகள் (இரும்பு தடுப்புகள்) வாங்கப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும்.
மேலும், சாலை பாதுகாப்பு குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட சாலை திருத்தங்களை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊரக சாலைகளில் மேற்கொள்ள அந்தந்த நிர்வாகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வேலூர்:
வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம், ஏரியூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜை கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நவகிரம்பமும் நடந்தது. காலை 9 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.
இதையடுத்து வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க பூஜையில் வைக்கப்பட்டு இருந்த புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
- ஒரு வாரமாக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறி வந்தார்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை கிராமத்தில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வசந்தநடை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருசிறார்.
கடந்த ஒரு வாரமாக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். அதிர்ந்து போன பெற்றோர்கள் மகளிடம் விசாரித்த போது அவரின் மாமா ராஜேந்திரன் (வயது 37) என்பவர் கட்டிட தொழில் செய்து வருபவர் தான் காரணம் என கூறியுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பள்ளிகொண்டா போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அதிகாரிகள் ஆய்வு
- குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தரமானதாக கட்ட வலியுறுத்தல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்த பணிகள் தரமாக செய்யப்படுகிறதா என அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, பொறியாளர்கள் சிவக்குமார், பிரியா, பணிமேற்பார்வையாளர் அபிராமி ஆகியோர் அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கெங்கநல்லூரில் நடைப்பெற்று வரும் நிழற்கூடம் கட்டும் பணி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணியையும் பார்வையிட்டனர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
அங்கு சுமார் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.
புகாரின் அடிப்படையில் செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவது தெரிந்தது.
பின்னர் பள்ளி கட்டிட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம் என பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் பள்ளி கட்டிடத்தை மாற்று இடத்தில் அளவீடு செய்து முதலில் இருந்து துவங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது 60 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவுற்றிருந்த நிலையில் பள்ளி கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியதாக அதிகாரிகள் கட்டிடப் பணியை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டிடப்பணியை தரமானதாக கட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- பொதுத்தேர்வு 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்க உள்ளது
- www.dge1.gov.in எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது
வேலூர்:
பிளஸ்-2 வகுப்புக்கு வரும் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 3 ந் தேதி வரை பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள், அரசு தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், www.dge1.gov.in எனும் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
எனவே, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்கள் பள்ளியின் ரகசிய குறியீடு மற்றும் பதிவெண்ணை பயன்ப டுத்தி, மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு, மாணவர்கள் விவரங்கள் அடங்கிய முகப்புத்தாள் (டாப் ஷீட்) அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக தேர்வு மையங்க ளுக்கு வழங்கப்பட்டது.
இதில், சேதமடைந்த முகப்புத்தாள், பாடத்தொ குப்பு எண் மாற்றம் அடைந்த முகப்புத்தாள் மற்றும் முகப் புத்தாள் பெறப்படாத நிலை ஆகிய காரணங்கள் இருந் தால், சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் இணையதளம் வழியாக முகப்புத் தாள்களை வரும் 8-ந் தேதி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அரசு தெரிவித்துள்ளது.
இது தவிர, மாணவர் பெயர் பட்டியலில் பதிவுகள் சரியாக இருந்து, தேர்வு மையங்களுக்கு வழங்கப் பட்ட முகப்புத்தாள்களில் தேர்வரின் பெயர், பயிற்று மொழி தவறாக இருப்பின், சிவப்பு நிற மையால் திருத் தம் செய்து முதன்மைக் கண் காணிப்பாளர்கள் கையொப் பம் இடவேண்டும்.
மாணவர்களின் புகைப் படம் மாறியிருந்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் சரி யான புகைப்படத்தை ஒட்டி, அங்கு முதன்மைக் கண்கா ணிப்பாளர்கள் கையொப்பம் இடவேண்டும் என தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
- 6 கால பூஜைகள் நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கைலாயநாதர் கோவில் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுககு முன்பு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து இன்று நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்றது.
இன்று காலை கோவில் முன் பிரமாண்ட பந்தல் அமைத்து 6 கால பூஜைகள் செய்து யாகங்கள் நடத்தப்பட்டது.
மேலும் இக்கோவிலில் பித்தளையால் அமையப்பெற்ற நடராஜ சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 5 பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு அமைக்கப்பட்டு இருப்பது 6-வது முறையாக பித்தளையில் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
காலை 6.30 முதல் நடராஜர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த விமான கலசத்திற்கு புனித கலச நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து.அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
சென்னையில் இருந்து வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு அரிசி பருப்பு, நெய் மளிகை பொருட்கள் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வேலூர் வழியாக சென்றது.
லாரியை ஆம்பூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை வேலூர் அடுத்த கொணவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லாரியின் பின்பகுதியில் லேசான புகை வந்தது.
லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் இதனைக் கண்டு உடனடியாக லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். லாரி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி பற்றி எரிய தொடங்கியது.
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேலூர் தீயணைப்பு நிலையத்தில் வாகனங்கள் இல்லாததால் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் லாரியில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்வி செலவினை 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்
- 700-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
வேலூர்:
தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கைக்கணினி வழங்கப்படும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்குகான கல்வி செலவினை 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்.
வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவாக ஆசிரியர்கள் அழைத்து ச்செல்லப்படுவர் என்ற அறிவிப்புகள் ஆசிரியர் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வரவேற்கின்றோம். தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் ஆசிரியர்களுக்காக பல திட்டங்களை அறிவித்துள்ளார் அவர்கள் நீண்டகாலம் நலமாக வாழ வேண்டும் என ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்று அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 சதவிகித தொகுப்பூதிய பணிக்காலத்தினை ஓய்வூதியம் பெறுவதற்கு கணக்கிட்டு அரசானை வெளியிட கோருகின்றோம்.
காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மெல்லக் கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை நடைமுறை படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட கோருகின்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் காண கபடி விளையாட்டு போட்டி காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.
போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
4 பிரிவுகளாக கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8அணிகளும், கல்லூரி பிரிவு சார்பில் 5, அணிகளும் பொது பிரிவில் 2 அணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் 2 அணிகள் என மொத்தம் 17 அணிகள் பங்கேற்றன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து விட்டார். மூதாட்டியின் சவ ஊர்வலம் அன்று மாலையில் நடைபெற்றது.
சவ ஊர்வலத்தின் போது வாகனத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கி கொளுத்தி தூக்கி போட்டு உள்ளனர். பட்டாசு வெடித்ததில் கள்ளூர் கிராமம் சீனிவாசா நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 30) டிரைவர், உடன் இருந்த கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி டில்லி பாபு (27) ஆகிய இருவரும் பட்டாசு வெடித்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்து வமனையில் சேர்க்க ப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பிரபாகரன் நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் இறந்த தகவல் அறிந்ததும் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரிக்கும்
- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வேலூர்:
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெயிலின் கொடுமை வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் குறைவாக காணப்பட்டது.
ஆனால் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வழக்கத்தை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி வதங்கி கருகியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.
பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு வியாபாரம் களைகட்டியது. இதுதவிர தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.
இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, வெப்ப அலைகளால் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க பொதுமக்கள் கவனமாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் எச்சரித்துள்ளனர்.
- போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்
- மாணவனின் செல்போன் எண்ணை வைத்து மீட்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார்.
மாணவன் மாயம்
இவர்களது மகன் குடியாத்தத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற மாணவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
மாணவன் பள்ளிக்கு வராதது குறித்து வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு நெருங்கி வரும் வேளையில் 10-ம் வகுப்பு மாணவர் வகுப்பிற்கு வராதது குறித்து தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் பெற்றோரை தொடர்பு கொண்ட போது மாணவன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டதாக கூறியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவன் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக மாணவனின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்துள்ளனர்.
எந்தவித தகவலும் கிடைக்காததால் உடனடியாக குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாணவன் காணாமல் போன தகவல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்டார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வேலூர் சைபர் கிரைம் போலீசார் இணைந்து அந்த மாணவன் கொண்டு சென்ற செல்போன் எண்ணை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்தனர்.
அந்த மாணவனின் செல்போன் வேலூரை கடந்து செல்வது தெரியவந்து.
உடனடியாக தனிப்படை போலீசார் பின் தொடர்ந்து சென்றனர் சற்று நேரத்தில் அந்த மாணவன் செல்போன் காஞ்சிபுரத்தை காட்டியுள்ளது தனிப்படையினர் காஞ்சிபுரத்துக்கு சென்றுள்ளனர் அதற்குள் அந்த மாணவனின் செல்போன் சென்னை அருகே மதுரவாயிலை காட்டியது.
தனிப்படை போலீசார் மதுரவாயல் சென்றுள்ளனர். அதற்குள் அந்த மாணவன் அடிக்கடி செல்போனை ஆப் செய்து விட்டு தேவைப்படும்போது மட்டுமே ஆன் செய்துள்ளார் இதனால் சைபர் கிரைம் போலீசாருக்கு அடிக்கடி அந்த மாணவனின் செல்போனை தொடர்பு கொள்ள பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அந்த மாணவன் இருந்த இடத்தை சரியான நேரத்தில் கண்டுபிடி த்தனர்.
மாணவனை நள்ளிரவே குடியாத்தம் கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அப்போது பெற்றோர் கண்டித்ததால் சென்னைக்கு சென்று விட்டதாக அந்த மாணவன் தெரிவித்தார்.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து 6 மணி நேரத்தில் அந்த மாணவனை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடித்த தனிப்படை போலீசாரை வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினார்கள்.






