search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
    X

    வேலூரில் வெயிலை சமாளிக்க அதிகளவில் வெள்ளரிக்காய் விற்பனை நடக்கிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

    • வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரிக்கும்
    • பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெயிலின் கொடுமை வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

    பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் குறைவாக காணப்பட்டது.

    ஆனால் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வழக்கத்தை விட 3 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி வதங்கி கருகியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.

    பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு வியாபாரம் களைகட்டியது. இதுதவிர தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.

    இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, வெப்ப அலைகளால் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்க பொதுமக்கள் கவனமாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×