என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர் புதிய திட்டங்களுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு
    X

    ஆசிரியர் புதிய திட்டங்களுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு

    • கல்வி செலவினை 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்
    • 700-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

    வேலூர்:

    தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கைக்கணினி வழங்கப்படும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

    உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்குகான கல்வி செலவினை 50 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும்.

    வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலாவாக ஆசிரியர்கள் அழைத்து ச்செல்லப்படுவர் என்ற அறிவிப்புகள் ஆசிரியர் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

    தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் வரவேற்கின்றோம். தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளில் ஆசிரியர்களுக்காக பல திட்டங்களை அறிவித்துள்ளார் அவர்கள் நீண்டகாலம் நலமாக வாழ வேண்டும் என ஆசிரியர் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

    மேலும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்று அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 சதவிகித தொகுப்பூதிய பணிக்காலத்தினை ஓய்வூதியம் பெறுவதற்கு கணக்கிட்டு அரசானை வெளியிட கோருகின்றோம்.

    காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    மெல்லக் கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை நடைமுறை படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்றிட கோருகின்றோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×