என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பமாக்கிய மாமன் கைது"

    • ஒரு வாரமாக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறி வந்தார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை கிராமத்தில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பம் ஆக்கிய மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வசந்தநடை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருசிறார்.

    கடந்த ஒரு வாரமாக வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறி வந்தார். அவரை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். அதிர்ந்து போன பெற்றோர்கள் மகளிடம் விசாரித்த போது அவரின் மாமா ராஜேந்திரன் (வயது 37) என்பவர் கட்டிட தொழில் செய்து வருபவர் தான் காரணம் என கூறியுள்ளார்.

    இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார்  அளித்தனர். பள்ளிகொண்டா போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×