என் மலர்tooltip icon

    வேலூர்

    • எஸ்.பி. ஆபீசில் புகார்
    • நடவடிக்கை எடுக்க தாய் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:-

    ஆசனாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை என் மகன் காதலித்து வந்துள்ளார்.

    அப்போது காதலுக்காக 15 வயது சிறுமி எனது மகனின் காதலுக்கு தூது சென்றார்.

    இந்த நிலையில் 15 வயது சிறுமியின் தாயார் அந்த வாலிபர் சென்று எனது மகளை திருமணம் செய்துகொள் வாழ்க்கை சிறப்பாக அமையும், அதற்கு நான் வழிவகை செய்து தருகின்றேன் என 15 வயது சிறுமியின் தாயார் எனது மகனிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    திருமணம் செய்துகொள் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எனது சிறுமியை எனது மகன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என புகார் மனு கொடுத்தார்.

    விசாரணையின் போது போலீஸ் நிலையம் வெளியே வந்து எனது மகனை மிரட்டி கட்டாய தாலிகட்டுமாறு கூறியுள்ளனர். அதனை மறுத்து அவர் உன் மகளுக்கு 15 வயது தான் ஆகின்றது.

    நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயார் தற்போது சும்மா கட்டு 18 வயது ஆனதும் என் மகளை உங்க வீட்டுக்கு அழைத்து போ என கூறி அவரை மிரட்டி அங்கே கையில் தயார் நிலையில் வைத்து இருந்த மஞ்சல் கயிற்றை கட்ட வைத்துள்ளனர். இதனையடுத்து புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.

    எனது மகனை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர்.

    இருப்பினும் எனது மகன் ஏதேனும் தவறு செய்து இருந்தால் விசாரித்து உரிய பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கலாம், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எவ்வித தடங்களும் இல்லை எனது மகனை காப்பாற்றி முழுமையாக என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்
    • சுமார் 500 அடி ஆழம் உள்ளது

    வேலூர்:

    வேலூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 73). இவர் கடந்த 6-ந் தேதி சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் சின்னத்தம்பியை பல்வேறு இடங்களில் தேடினர்.

    சித்தேரி கல்குவாரி குட்டைபகுதியில் சின்னத்தம்பியின் ஆடைகள் இருந்தன.

    இதனால் அவர் கல்குவாரி தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இது குறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்தனர். கல்குவாரியில் சின்னத்தம்பியை தேடும் பணி நடந்தது. நேற்று மாலை அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று மாலை முதல் கல்குவாரி குட்டையில் சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.

    கல்குவாரிகுட்டை சுமார் 500 அடி ஆழம் உள்ளது. மேலும் தண்ணீருக்கு அடியில் முள் புதர்கள் உள்ளன. அதில் சின்னத்தம்பி சிக்கி இருக்கலாம். தொடர்ந்து 3-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது.

    • 4 மாதத்திற்கு பின் உடல் தோண்டி எடுப்பு
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த மலை சந்து பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 35). பால்காரர். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களிலேயே ஜெயப்பிரியா கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். நடராஜன் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசூர் புளியந்தோப்பு அருகே நடராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடப்பதாக நடராஜனின் அண்ணன் சேட்டுவிற்கு தகவல் கிடைத்தது.

    அவர் சம்பவ இடத்திற்கு நண்பர் கோபியுடன் சென்று மயக்க நிலையில் கிடந்த நடராஜனை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று நவம்பர் 2-ந் தேதி வீட்டிற்கு வந்தார். பின்னர் 5-ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற சில மணி நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நடராஜனின் அண்ணன் சேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அரியூர் போலீஸ் நிலையத்தில் தனது தம்பி நடராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் நடராஜன் உடலை தோண்டி எடுத்தனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது எலும்பு கூடுகளை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் பேச்சு
    • மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது

    வேலூர்:

    வேலூர் நறுவீ மருத் துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா, பல நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மருத்துவ மனையின் மருத்துவ சேவைகள் தலைவர் டாக் டர் அரவிந்தன் நாயர் வர வேற்றார். நறுவீ மருத்துவ மனை தலைவர் ஜி.வி. சம்பத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இந்திய கலாச்சாரத்தில் பாரம்பரியமாக பெண்க ளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மேற்கத்திய கலாச்சாரம் பரவி இருந் தாலும், பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை சொல்லி வளர்த்து வருகின் றனர். சமுதாயத்தில் பெண் களுக்கு உரிய அதிகாரம் வழங்கவேண்டியது அவசி யமாகிறது.

    பெண்களுக்கு வழங்கப்படும் சம பங்கு காரணமாக இன்று பைலட், ராணுவம், காவல் துறை, மருத்துவ துறை, சட்டம் மற்றும் நீதி, நிர்வாக துறைஉள்ளிட்ட எல்லா துறை களிலும் உயர் பதவியில் வகிக்கின்றனர்.

    மருத்துவ சேவை யில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. நறுவீ மருத்துவமனையில் ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்கள் எண் ணிக்கை அதிகம். இந்த மருத்துவமனை, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ் வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக வேலுார் சிஎம்சி மருத்துவ மனை முன்னாள் இயக்கு னர் டாக்டர் ஜாய்ஸ் பொன் னையா கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில், மருத்துவம னையின் குழந்தைகள் நல தலைமை டாக்டர் சோனி யா மேரிகுரியன்,மகப்பேறு டாக்டர் ரம்யா, மருத்துவ மனை மகப்பேறு தலைமை டாக்டர் அருணா கேக்ரே, பொது மேலாளர் நித்தின் சம்பத் மற்றும் மருத்துவர் கள், செவிலியர்கள், ஊழிய ர்கள் என பலர் பங்கேற் றனர். மருத்துவ கண்கா ணிப்பாளர் டாக்டர் ஜேக் கப் ஜோஸ் நன்றி கூறினார்.

    • குழந்தை உட்பட 5 பேர் உயிர்தப்பினர்
    • போக்குவரத்து பாதிப்பு

    வேலூர்:

    சென்னையை சேர்ந்த 5 பேர் இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    கார் வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.அப்போது காரின் வலது புறம் உள்ள முன் பக்க டயர் திடீரென வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி மீண்டும் சாலையில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.காரில் இருந்த குழந்தை உட்பட 5 பேரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    அந்த வழியாக சென்றவர்கள் உடனே காரில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்தில் சிக்கியவர்கள் யார்? என தெரியவில்லை. சென்னை பதிவெண் கொண்ட கார் என்பதால் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

    • ஆட்டோ, கார் தனியார் பஸ், லாரி ஓட்டுபவர்கள் சேரலாம்
    • கதிர் ஆனந்த் எம்.பி. தகவல்

    வேலூர்:

    தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று நடந்தது.

    தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் கதிர் ஆனந்த் எம்.பி, செயலாளர் தர்மபுரி செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினர்.

    இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தி.மு.க.அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் கதிர் ஆனந்த் எம்.பி. கூறியதாவது:-

    அமைப்புசாரா ஓட்டுநர்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் அரசு உதவி கிடைத்து பயன்பெறும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியை உருவாக்கியுள்ளார்.

    இதில் அரசு பணிகளில் உள்ள டிரைவர்கள் உறுப்பினராக முடியாது. மற்றபடி ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி, கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகன டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டிராக்டர் டிரைவர்கள் பொக்லைன் டிரைவர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடக்கூடிய வாகனங்களின் டிரைவர்கள் உறுப்பினராக சேரலாம்.

    அமைப்புசாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகளுக்கான முதல் நேர்காணல் வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சென்னை திருச்சி மதுரை, கோவை பகுதிகளில் தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற உள்ளது.

    நேர்காணல் முடிந்த பிறகு நிர்வாகிகளின் திறமைக்கேற்ப அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். மேலும் தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணியில் சேரும் உறுப்பினர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள்.

    அதன் மூலம் அவர்களுக்கு விபத்து நேர்ந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களது குழந்தைகள் பள்ளி படிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடியும்.

    தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் மீதும் அவர் நடத்துகின்ற திராவிட மாடல் ஆட்சி மீதும் மக்களுக்கு அற்புதமான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுய பாதுகாப்பு, தற்பாதுகாப்பு அவசியம்
    • சுகாதார குழுவினர் அறிவுரை

    வேலூர்:

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பதிவாகவில்லை.

    வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 197 பேருக்கும், பிப்ரவரி மாதம் 142 பேருக்கும், மார்ச் மாதம் தற்போது வரை 17 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற 22 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள், 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மாத்திரைகள், படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோருக்கு இன்புளூயன்சா உள்ளதா என தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மட்டும் மாநகர பகுதிகளில் 81 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் தூய்மை பணி, கண்காணிப்பு செய்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அனுக வேண்டும்.

    சளி, தொண்டை வலி, மூக்கில் நீர் வழிதல், உடல் வலி உள்ளிட்டவை இன்புளூயன்சாவுக்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இவை சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும் என்பதால் பரிசோதனை மூலமே தெரியவரும். கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சூடான தண்ணீரை குடித்தல், சூடான உணவை உண்ணுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் போன்றவை மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடிக்க முடியும். சுய பாதுகாப்பு, தற்பாதுகாப்பு என்பது அவசியம்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் அவை சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அதிகமாக காய்ச்சல் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த கோணமலை பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 60). இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று மதியம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே மாசிலாமணி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, கோயம்புத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர் பாராதவிதமாக மாசிலாமணியின் பைக் மீது மோதியது.

    இதில், தூக்கி வீசப்பட்ட மாசிலாமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாசிலாமணியின் உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது.
    • காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    வேலூர்:

    வேலூரில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பதிவாகவில்லை.

    வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 197 பேருக்கும், பிப்ரவரி மாதம் 142 பேருக்கும், மார்ச் மாதம் தற்போது வரை 17 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் மாவட்டம் முழுவதும் 32 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில் 10 பேர் மட்டுமே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற 22 பேரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள், 46 ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருந்து மாத்திரைகள், படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

    காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுவோருக்கு இன்புளூயன்சா உள்ளதா என தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். நேற்று மட்டும் மாநகர பகுதிகளில் 81 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடத்தில் தூய்மை பணி, கண்காணிப்பு செய்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    காய்ச்சல் இருந்தால் மக்களே தானாக மருந்து மாத்திரைகளை எடுக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    சளி, தொண்டை வலி, மூக்கில் நீர் வழிதல், உடல் வலி உள்ளிட்டவை இன்புளூயன்சாவுக்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இவை சாதாரண காய்ச்சலுக்கும் பொருந்தும் என்பதால் பரிசோதனை மூலமே தெரியவரும். கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சூடான தண்ணீரை குடித்தல், சூடான உணவை உண்ணுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தால் போன்றவை மூலம் காய்ச்சல் பரவலை தடுக்க முடிக்க முடியும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அஞ்ச வேண்டாம் அவை சாதாரண காய்ச்சலாக இருக்கலாம் அதிகமாக காய்ச்சல் இருக்கும் சமயத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். என்று சுகாதார குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளதாக புகார்
    • பொதுமக்கள் மனு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பதியின் தாயார் ஜானகி அம்மாள் (வயது 73).

    இவர் புதுக்கோட்டை ராஜாஜி கவுண்டர் நகர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு முகமூடி கொள்ளையர்கள் இவரது வீட்டில் புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    இந்த நிலையில் திருப்பதி தனது ஊர் பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியதாவது;-

    தனது தாயாரை தாக்கி கம்மல் மற்றும் பீரோவில் இருந்த ரொக்கம், கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் எனது குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளனர் எனவே உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவி பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் மேல் மிட்டாளம் பகுதியில் வீடுகளுக்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

    நேற்று இரவு அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள வீடுகளில் தீப்பிடித்து மள மளவென எறிய தொடங்கியது.

    பின்னர் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டின் மாடியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக வேலூர் மாவட்டத்தில் 81 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு பணிக்கு முதல் நிலை கண்காணிப்பாளர் துறை அலுவலர், தேர்வு தாள் கட்டுக்காப்பாளர், வகுப்பறை கண்கா ணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 2079 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதனையொட்டி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்வு பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார்.

    வேலூர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் இந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்து முன்னேற வேண்டும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசுகையில்:-

    தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

    குறிப்பாக வினாத்தாள்களை செல்போன்களில் போட்டோ எடுக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அம்மை நோய் உள்ளிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்படும் மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாள் அனைத்து தேர்வு மையங்களிலும் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×