டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து

அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவி பொருட்கள் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
டிரான்ஸ்பார்மர் தீ பற்றி எரிந்த காட்சி.
டிரான்ஸ்பார்மர் தீ பற்றி எரிந்த காட்சி.
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் மேல் மிட்டாளம் பகுதியில் வீடுகளுக்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

நேற்று இரவு அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள வீடுகளில் தீப்பிடித்து மள மளவென எறிய தொடங்கியது.

பின்னர் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டின் மாடியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com