search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell phone use is prohibited"

    • முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    பிளஸ் 2 பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக வேலூர் மாவட்டத்தில் 81 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு பணிக்கு முதல் நிலை கண்காணிப்பாளர் துறை அலுவலர், தேர்வு தாள் கட்டுக்காப்பாளர், வகுப்பறை கண்கா ணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் 2079 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதனையொட்டி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்வு பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார்.

    வேலூர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் இந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்து முன்னேற வேண்டும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசுகையில்:-

    தேர்வு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

    குறிப்பாக வினாத்தாள்களை செல்போன்களில் போட்டோ எடுக்கக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    அம்மை நோய் உள்ளிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்படும் மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாள் அனைத்து தேர்வு மையங்களிலும் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×